இன்று நரசிம்மர் ஜெயந்தி.. உங்க பணக்கஷ்டம் தீர நரசிம்மரை இப்படி வழிபடுங்க!

First Published | May 4, 2023, 9:59 AM IST

narasimha jayanti 2023: நரசிம்ம ஜெயந்தி தினத்தில் மனதார நரசிம்ம மூர்த்தியை வேண்டிக் கொண்டு வழிபாடு செய்தால் எல்லா பிரச்சனைகளும் நீங்கும் என்பது ஐதீகம். 

திருமாலின் அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த அவதாரமாக நரசிம்ம அவதாரமே சொல்லப்படுகிறது. ஏனென்றால் நாம் கேட்கும் வரங்களை கேட்டதற்கும் மேலாக வாரி வழங்கும் நரசிம்ம மூர்த்தி அவதரித்த நாளை தான் நரசிம்ம ஜெயந்தி ஆக ஒவ்வொரு ஆண்டும் நாம் கொண்டாடி வருகிறோம். 2023ஆம் ஆண்டின் நரசிம்ம ஜெயந்தி இன்று (மே.4) கொண்டாடப்படுகிறது. 

நரசிம்மர் ஜெயந்தி 2023 

சித்திரையின் சதுர்த்தசியும், சுவாதி நட்சத்திரமும் கூடிய பிரதோஷ காலத்தில் நரசிம்ம அவதாரம் எடுத்ததாக நம்பப்படுகிறது. இந்தாண்டு சதுர்த்தசி திதி மே 03ஆம் தேதியே தொடங்கினாலும், மே 04 ஆம் தேதியான இன்றுதான் நரசிம்மர் ஜெயந்தியாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

Latest Videos


நரசிம்மர் வழிபாடு 

நரசிம்ம ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து வீட்டில் விளக்கு ஏற்றிவிடவேண்டும். நரசிம்மருக்கு பாலும், பானகமும் நைவைத்தியமாக படையலிட்டு வழிபட வேண்டும். உங்கள் வீட்டுக்கு அருகில் நரசிம்மர் கோயில் இருக்கும்பட்சத்தில் நேரில் சென்று வழிபடுங்கள். இன்று மாலை 6.30 மணிக்கு மேலாக .. 07.30 மணிக்குள்ளாக நரசிம்மர் வழிபாட்டை செய்து முடிப்பது நல்ல பலனை தரும். இன்றைய தினம் நரசிம்மரை வழிபட்டால் கடன் தொந்தரவு, பணக்கஷ்டம், வறுமை ஆகியவை நீங்கும். எதிரிகளின் தொல்லைகளை சமாளிக்கலாம். இழுபறியாக கிடந்த வழக்கு முடியும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் நரசிம்மருக்கு விரதமிருந்து வழிபட்டால் எளிய தீர்வு கிடைக்கும். 

இதையும் படிங்க: சந்திர கிரகணம் 2023 எப்போது? தேதி, நேரம் குறித்த முழுவிவரம்...

நரசிம்ம காயத்ரி மந்திரம் உச்சரியுங்கள்: 

நரசிம்ம ஜெயந்தி நாளில் நரசிம்மரின் காயத்ரி மந்திரத்தை 11 தடவை அல்லது 108 முறை ஜெபிக்க வேண்டும். இப்படி அவருடடைய மந்திரத்தை மனம் லயித்து உச்சரிப்பதால் நரசிம்மரின் அருளும் ஆசியும் பூரணமாக பெற்று கொள்வீர்கள். நரசிம்மருக்கு இன்றைய தினம் துளசி மாலை சாற்றி, பானகம் படைத்து வழிப்பட்டால் கூடுதல் சிறப்பு. 

இதையும் படிங்க: சித்ரா பௌர்ணமி பூஜைக்கு இத்தனை நன்மைகள் உள்ளதா?

click me!