Today Rasipalan 4th May 2023: மற்றவர்கள் பிரச்னையில் தலையை விட்டு மாட்டிக்காதீங்க..! எந்தெந்த ராசிக்காரருக்கு

Published : May 04, 2023, 05:30 AM IST

மே 4ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

PREV
112
Today Rasipalan 4th May 2023: மற்றவர்கள் பிரச்னையில் தலையை விட்டு மாட்டிக்காதீங்க..! எந்தெந்த ராசிக்காரருக்கு

மேஷம்:

இன்றைய தினம் மிகச்சிறப்பாக தொடங்கும். உங்கள் தனிப்பட்ட வேலையில் பிசியாக இருப்பதால் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாது. மன அழுத்தம் அடையாமல் கொஞ்ச நேரம் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கவும்.
 

212

ரிஷபம்:

பொருளாதார சூழலை பலப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். நீண்ட நேர விவாதம் வெற்றியை தரலாம். ஆனாலும் எந்த முடிவையும் சீக்கிரம் எடுத்து விரைவில் வேலையை தொடங்குவது நல்லது.
 

312

மிதுனம்:

இன்றைய தினம் அவசரப்படாமல் அனைத்து வேலைகளையும் முறையாக செய்து முடிப்பீர்கள். உறவுகளை பலப்படுத்த நீங்கள் சிரத்தை எடுக்க வேண்டியிருக்கும். எந்தவிதமான சூழலிலும் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்கவும். கோபத்தை தவிர்க்கவும். பழைய சொத்து ஒன்றை விற்கும் அல்லது வாங்கும் டீல் வெற்றிகரமாக முடியும்.
 

412

கடகம்:

நீங்கள் அண்மைக்காலமாக எடுத்துவரும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பெண்கள் குடும்பத்தில் அவர்களது கடமையை செவ்வனே செய்வார்கள். தொழிலில் வளர்ச்சி இருக்கும்.
 

512

சிம்மம்:

உங்களது குணாதிசயத்தை சில தவறாக பயன்படுத்தலாம். கவனமாக இருக்கவும். மற்றவர்களின் பிரச்னையை தீர்க்கப்போய், உங்களுக்கு ஆதாயம் தரும் செயலை செய்ய தவற நேரிடும். உங்கள் பிரச்னையை தீர்க்க குடும்பத்தினர் உதவி செய்வார்கள்.
 

612

கன்னி:

அரசியல் தொடர்பில் இருக்கும் நபரின் உதவியுடன் சொத்து பிரச்னை தீரும். உங்கள் தனிப்பட்ட பிரச்னையில் வெளிநபரை தலையிட அனுமதிக்க வேண்டாம். எந்த திட்டமிடுவதாக இருந்தாலும், மீண்டுமொரு முறை யோசிக்கவும். சோம்பேறித்தனமாகவும் கவனக்குறைவாகவும் இருப்பீர்கள்.
 

712

துலாம்:

தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம். முக்கியமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அவசரத்தில் எடுக்கும் முடிவு தவறாகும். குழப்பமாக இருந்தால் பெரியவர்களிடம் ஆலோசித்து அவர்களது ஆலோசனையை பெறவும். சிறிய விஷயங்களுக்காக மன அழுத்தம் அடையாதீர்கள். 
 

812

விருச்சிகம்:

இன்று சில பிரச்னைகள் வரும். உங்கள் புத்திசாலித்தனத்தால் அந்த பிரச்னைகளை தீர்ப்பீர்கள். நெருங்கிய உறவினர்களுடன் நீங்கள் செலவழிக்கும் நேரம், உறவை பலப்படுத்த உதவும். தொழிலில் பிரச்னைகள் ஏற்படும்.

912

தனுசு:

இன்று ரிலாக்ஸாக இருப்பீர்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முக்கியமான வேலையை செய்வதன் மூலம் மனதளவில் மிகுந்த மகிழ்ச்சியடைவீர்கள். பிரச்னைகளுக்கு பொறுமையாகவும் நிதானமாகவும் இருந்து தீர்வை தேடுங்கள். தொழிலில் லாபகரமான தினமாக இருக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். 
 

1012

மகரம்:

அவசரத்தில் எடுக்கும் முடிவு தவறாக முடியும். உங்களது சில கனவுகள் நனவாகாததால் மன அதிருப்தி அடைவீர்கள். தொழிலில் மந்த நிலை இருக்கும். 

1112

கும்பம்:

உங்கல் மனதிற்கு சரியென்று பட்ட முடிவை எடுங்கள். உடன்பிறந்தவர்களுடன் நல்லுறவை பேணுங்கள். குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணியுங்கள். தொழிலிலும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கவும். பயணங்களை தவிர்க்கவும். 
 

1212

மீனம்:

அவசரமாக எந்த செயலையும் செய்ய வேண்டாம். உங்கள் நம்பிக்கையும், செயலாற்றலும் அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்தி நிதானத்தை கடைபிடிக்கவும். முக்கியமான வேலைகளில் சில தடங்கல்கள் ஏற்படலாம். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
 

Read more Photos on
click me!

Recommended Stories