மாசி மகம் நாளில் ஐயன் சிவனையும், மகாவிஷ்ணுவையும், பித்ருக்களையும் வழிபட்டால் ஏழு ஜென்ம தோஷங்கள் அகன்று எல்லா விதமான நன்மைகளையும் ஒன்றாகப் பெற்று செழுமையான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். இன்று மாசி மகம் வழிபாட்டை அதிகாலையில் எழுந்து விரதம் இருந்து பலர் தொடங்கிருப்பர்.
மாசி மகம் மகத்துவம்..
இறைவழிபாட்டிற்கு ஏற்ற மாதமான மாசியில் வரும், இந்த நாளில் சிவபெருமான், மகாவிஷ்ணு, முருகப்பெருமான் ஆகிய முப்பெரும் கடவுளுக்கும் வழிபாடு செய்யலாம். இந்த நன்னாளில் அவர்களை வணங்கும்போது தோஷங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது. இன்றைய தினம் புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்வதும், புண்ணிய நதிகளில் நீராடுவதும் பாவங்களை போக்கி இறைவனின் அருளை பெற்று தரும் என்பது ஐதீகம்.
பிதுர் கடன்...
மகம் நட்சத்திரம் என்றால் பித்ருக்களுக்கு உகந்தது. அதனாலேயே இன்றைய தினம் பித்ருக்கள் வழிபாடு சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கும்பகோணம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் தர்ப்பணம், பிதுர் கடன் போன்றவை செய்தால் கூடுதல் சிறப்பு.