Today Rasipalan 6th Mar 2023: எந்த ராசிக்காரர் என்ன செய்யலாம்..? தெரிஞ்சுக்கங்க

Published : Mar 06, 2023, 05:30 AM IST

மார்ச் 6ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

PREV
112
Today Rasipalan 6th Mar 2023: எந்த ராசிக்காரர் என்ன செய்யலாம்..? தெரிஞ்சுக்கங்க

மேஷம்:

உங்கள் வளர்ச்சிக்கான நற்செய்தி கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வீட்டில் மூத்தவர்களின் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படலாம். தொழில் ரீதியான முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.
 

212

ரிஷபம்:

மன நிம்மதி, குடும்ப மகிழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுங்கள். குழந்தைகளின் படிப்பு சார்ந்த விஷயத்தில் பரபரப்பாக இருப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவு உங்கள் பட்ஜெட்டை பாதிக்கும். மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்; திருடுபோக வாய்ப்புள்ளது.  தொழிலில் புதிய வெற்றி காத்துக்கொண்டிருக்கிறது.
 

312

மிதுனம்:

உங்கள் இனிமையான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். நீண்டகால கருத்து வேறுபாடுகள் அகலும். வரவுக்கேற்ப செலவும் அதிகரிக்கும். வேலையில் உங்கள் செயல்பாடு குறையும். துணையின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படலாம்.
 

412

கடகம்:

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்களுக்கு படிப்பில் வெற்றி கிடைக்கும். முகம் தெரியாதவர்களுடன் அதிக நட்பு பாராட்ட வேண்டாம். உங்கள் குடும்ப விஷயத்தில் வெளிநபர் தலையிட அனுமதிக்காதீர்கள். வாகனம் ஓட்டும்போது செல்ஃபோன் பேசாதீர்கள்.

உங்க வீட்டுக்கு வர பிரச்சனையை மணிபிளான்ட் வெச்சே ஈஸியா கண்டுபிடிக்கலாம்.. எப்படி-ன்னு பாத்து உஷாரா இருங்க..!
 

512

சிம்மம்:

நீண்ட இடைவெளிக்கு பிறகு வீட்டிற்கு நெருங்கிய உறவினர்கள் வருவார்கள். குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். முக்கியமான விவகாரம் குறித்து விவாதிப்பீர்கள். அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.
 

612

கன்னி:

உங்கள் சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடனான பிரச்னை 3வது நபரால் முடிவுக்கு வரும். புதிய நபர்களுடன் பழகும்போது கவனம் தேவை. இன்றைய நாள் முழுவதும் பொறுமையாக இருங்கள். தொழிலில் புதிய வெற்றி கிடைக்கும்.
 

712

துலாம்:

இன்றைய தினம் வீண் செலவுகளை தவிர்க்கவும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். வீட்டில் மூத்தவர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுங்கள். கணவன் - மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கும்.  உணவில் கவனம் தேவை.
 

812

விருச்சிகம்:

குடும்பத்தில் யாருக்காவது வரன் தேடிக்கொண்டிருந்தால் இன்று அமையும். திட்டமிட்டபடி வேலைகளை முடித்து வெற்றி காண்பீர்கள். உறவினரின் திடீர் வருகை இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.
 

912

தனுசு:

உறவினர்களின் உதவியுடன் நீண்டகால பிரச்னை முடிவுக்கு வரும். அதனால் மன நிம்மதி ஏற்படும். நிலம் வாங்க திட்டமிடுவீர்கள். நெருங்கிய நண்பருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தொழிலில் அதிக ஈடுபாடு தேவை.
 

1012

மகரம்:

எப்பேர்ப்பட்ட சூழலிலும் உங்கள் குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எனவே குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். வீட்டில் உள்ள மூத்தவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரம், குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். யாரையும் அதிக நம்ப வேண்டாம். 

வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய.. சிறப்புவாய்ந்த நவகைலாய தலங்கள் எங்குள்ளது தெரியுமா?

1112

கும்பம்:

குடும்பத்தினருக்கு உங்கள் மீது இருக்கும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். முதலீடுகள் செய்ய ஏற்ற நாள் இன்று. கோபத்தை தவிர்க்கவும். தொழில் வழக்கம்போல நடக்கும். குடும்பச்சூழல் இனிமையாக இருக்கும்.
 

1212

மீனம்:

சுயபரிசோதனை செய்வதில் இன்று அதிக நேரத்தை செலவு செய்வீர்கள். அது உங்களை பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும். முதலீடு செய்யும் முன் நிறைய யோசியுங்கள். தொழிலை மேம்படுத்த திட்டமிடுவீர்கள்.
 

Read more Photos on
click me!

Recommended Stories