இன்று இரவு இந்த ஒரு பரிகாரத்தை செய்து விடுங்கள்.. 21 நாள்களில் அனைத்து பிரச்சனைகளும் இனிதாக முடிந்துவிடும்...!

First Published | Mar 4, 2023, 5:17 PM IST

வீட்டில் மன அமைதியும்... எல்லா பிரச்சனைகளும் தீர எளிய பரிகாரம்..

கடன் பிரச்சனை, குழந்தைகள் படிப்பு விஷயம், குடும்ப மனஸ்தாபம் அனைத்திற்கும் ஒரே பரிகாரம் செய்தால் போதும். நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நம் முன் ஜென்ம வினைகள் கூட காரணமாக இருக்கலாம். அதன் பலனாக கூட நமக்கு இப்போது பிரச்சனை வரலாம். எல்லாம் விதிக்கப்பட்டவை தான். இதற்கு என்ன பரிகாரம் செய்தால் துன்பங்கள் எல்லாமே விலகும் என இங்கு காணலாம். 

கடல் நீரை தினமும் கொண்டு வந்து வீட்டில் தெளிப்பது நல்ல பலனை கொடுக்கும். ஆனாலும் அனைவராலும் நாள்தோறும் அப்படி செய்ய முடியாது. ஆகவே கல் உப்பு கலந்த நீரை வீட்டில் பயன்படுத்த பெரியோர் அறிவுறுத்துகின்றனர். கீழே சொன்னபடி கல் உப்பை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். 

Tap to resize

தரித்திரம் நீங்க சிறு கிண்ணத்தில் கைப்பிடி உப்பை போட்டு கொள்ளுங்கள். இதனை வீட்டின் நீர் படாத ஒரு மூலையில் வைத்து விடுங்கள். உப்பு கரைய, கரைய மீண்டும் உப்பை போடுங்கள். இப்படி செய்வதால் வீட்டில் உள்ளவர்களின் தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்.

இந்த பரிகாரத்தை இரவு நேரத்தில்தான் செய்ய வேண்டும். எப்போதும் எட்டு மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வீடு நிம்மதி இல்லாமல் எப்போதும் சண்டை சச்சரவுடன் இருந்தால் ஒரு கண்ணாடி டம்ளரில் கல் உப்பை போட்டு தண்ணீர் ஊற்றி குளியல் அறையில் வையுங்கள். இதனை மறுநாள் காலைவரை எடுக்கக் கூடாது. விடிந்த பின் அந்தத் தண்ணீரை எடுத்து கொண்டு போய் வீட்டு வாஷ் பேசினில் ஊற்றிவிட்டால் போதும். இந்த பரிகாரத்திற்கு 21 நாள்கள் கணக்கு. 

இதையும் படிங்க: Explained: உடற்பயிற்சி செய்யும்போதே நிகழும் மரணங்கள்.. மருத்துவர்கள் சொல்லும் பின்னணி என்ன?

தொடர்ந்து இதனை 21 நாள் செய்தால் எதிர்மறை ஆற்றல் குறையும். மறக்காமல் தினமும் காலை எழுந்ததும் அந்த நீரை எடுத்து கீழே கொட்டிவிடுங்கள். மேலும் மாதத்திற்கு ஒருதடவை கடல் நீரில் மூழ்கி குளிப்பது எதிர்மறை ஆற்றலை மட்டுப்படுத்தும். அதனால் தான் திருச்செந்தூர் போன்ற தலங்களுக்கு மக்கள் அடிக்கடி செல்கின்றனர். 

இதையும் படிங்க: உங்க வீட்டுக்கு வர பிரச்சனையை மணிபிளான்ட் வெச்சே ஈஸியா கண்டுபிடிக்கலாம்.. எப்படி-ன்னு பாத்து உஷாரா இருங்க..!

Latest Videos

click me!