உங்க வீட்டுக்கு வர பிரச்சனையை மணிபிளான்ட் வெச்சே ஈஸியா கண்டுபிடிக்கலாம்.. எப்படி-ன்னு பாத்து உஷாரா இருங்க..!

First Published | Mar 4, 2023, 4:02 PM IST

Money Plant Vastu Tips: வாஸ்துபடி வீட்டில் மணி பிளாண்ட் வளர்த்தால் வீட்டில் வரும் பிரச்சனைகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். 

வீட்டில் அழகு சேர்க்க சின்ன செடிகளை வளர்ப்பார்கள். அப்படிப்பட்ட செடிகளில் ஒன்றுதான் மணி பிளான்ட். வாஸ்துப்படி  மணிபிளான்ட் செடி, அதனுடைய பெயரைப் போலவே செல்வத்தின் அடையாளமாக தான் நம்பப்பட்டுவருகிறது. இந்த செடி வளர்த்தால் வீட்டில் பணம் அதிகம் சேரும் என்பார்கள். மணி பிளான்ட் இருக்கும் வீட்டில் செல்வ செழிப்பும் மகிழ்ச்சியும் தங்கும். 

இருப்பினும் வீட்டில் சரியான திசையில், இடத்தில் வைத்து வளர்த்தால் தான் நன்மை. இல்லையென்றால் பிரச்சனைகள் வருமாம். வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை  மணிபிளான்ட் எப்படி நமக்கு வெளிப்படுத்துகிறது என்பதை இங்கு காணலாம்.

Tap to resize

அதிகம் மெனக்கெடாமல் வளர்க்கக் கூடிய தாவரம் தான் மணி பிளாண்ட். இது நல்லா பராமரித்தும் காய்கிறது என்றால் உங்கள் வீட்டில் ஏதோ மிக பெரிய பிரச்சனை வந்து தாக்கப் போகிறது என பொருள் கொள்ள வேண்டும். இது நீங்கள் பணத்தை வீணாக செலவு செய்வதையும் குறிக்கிறது. சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து காய்ந்து போனால் பயப்படவேண்டாம். அது வெயிலுக்கு தானே தவிர வீட்டு பிரச்சனைகளுக்கு அல்ல. இதை நிழலில் வைத்து வளர்க்கலாம்..

money plant

வாஸ்து சாஸ்திரத்தின் படி நல்ல செழிப்பான வீட்டில் இருந்து  மணிபிளான்ட் செடியை திருடி உங்கள் வீட்டில் வளர்த்தால் உங்களுக்கு பணம் அதிகமாக சேரும் என்பது ஐதீகம். ஆனால் நீங்கள் திருடிய வீட்டில் இருப்பவர்களுக்கு பண பிரச்சனைகள் வரும். அப்படி இருக்கும்போது நீங்கள்  மணிபிளான்ட் செடியை வெளியில் வைத்திருந்தால் மற்றவர்கள் திருடிச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே வீட்டிற்குள் வளர்ப்பதே நல்லது. 

இதையும் படிங்க: பிச்சை எடுத்து செய்யும் சிவன் கோயில் பரிகாரம்.. ஆண் வாரிசுகளின் தலைமுறை சாபம்.. நீக்கும் சிவனருள்..

எப்போதும்  மணிபிளான்ட் செடியை மேலே படர்ந்து வளரும் வண்ணம் வளர்க்க வேண்டும். அது தரையை நோக்கி கீழே தொங்கி விழக் கூடாது. மேல் நோக்கி கொடியை படர செய்ய கயிறுகளை அல்லது நூலை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. மரப்பட்டியல், வலை மாதிரி பயன்படுத்துங்கள். 

புதன் பகவானுக்கு ஏற்ற பச்சை நிறத்தில் உள்ளது மணிபிளான்ட். ஆகவே இந்த மணிபிளான்டை வீட்டில் வைக்க விரும்பினால் புதன்கிழமை அன்று வையுங்கள். 

மணிபிளான்ட் செடியை எந்த வேகத்தில் வளர்கிறதோ அதே வேகத்தில் உங்களுக்கு செல்வம் சேரும். ஒருவேளை உங்கள் வீட்டு மணிபிளான்ட் செடி வளராமல் அப்படியே இருந்தால், பணம் சேர்வதற்கான அறிகுறி இல்லை என்பதை அறிந்து வாஸ்து நிபுணரிடம் ஆலோசனை கேளுங்கள். 

தென்கிழக்கு மூலையில் வைத்தால் தான்  மணிபிளான்ட் செடி நல்ல பணத்தை பெருக்கும். மறந்தும் அதனை வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டாம். மீறினால் திருமண வாழ்வில் பிரச்சனைகள் வெடிக்கும். 

இதையும் படிங்க: வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய.. சிறப்புவாய்ந்த நவகைலாய தலங்கள் எங்குள்ளது தெரியுமா?

Latest Videos

click me!