பிச்சை எடுத்து செய்யும் சிவன் கோயில் பரிகாரம்.. ஆண் வாரிசுகளின் தலைமுறை சாபம்.. நீக்கும் சிவனருள்..

First Published | Mar 4, 2023, 10:19 AM IST

தலைமுறையாக சில பிரச்சனைகள் குடும்பத்தை பாதிக்கும்... சாபங்கள், தோஷம், ஜாதகத்தின் கிரக அமைப்புகள் என தலைமுறையாக தொடரும் பிரச்சனைகளை தீர்க்க சிவன் கோயிலில் செய்யும் வினோத பரிகாரத்தை இங்கு காணலாம். 

தன் தாயார் உடல்நிலை சீராக வேண்டுமென கோடீஸ்வரர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரனாக மாறி அந்த சொற்ப பணத்தை கோயில் காணிக்கையாக போட்டதை சினிமாவில் பார்த்திருப்பீர்கள். அது திரைக்கதை மட்டுமல்ல.. உண்மையாகவே இப்படி தோஷ நிவர்த்தி செய்முறைகள் இன்றளவும் செய்யப்பட்டு வருகின்றன. தலைமுறை சாபத்தை நீக்க சிவன் கோயிலில் பரிகாரம் செய்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். 

கிராமத்து பரிகாரம்.. 

ஒரே ஒரு மகன் ஒருக்கும் பெற்றோர், 2 மகன்களை கொண்ட 9 பெற்றோரிடம் தலா ஒரு ரூபாய் பெற்று அதனை சிவன் கோயிலில் காணிக்கையிட வேண்டும். இது கிராமத்தில் உள்ள பரிகார பூஜை. வாரிசு சாபம் நீங்க செய்யும் பரிகாரங்களில் இதுவும் ஒன்று. 

Tap to resize

Image: Getty Images

தலைமுறை சாபம்..

சில குடும்பத்தில் ஒரே ஒரு ஆண் வாரிசு தான் பிறக்கும், அல்லது பெண் வாரிசுகளே பிறக்காது என்ற அமைப்பு இருக்கும். ஒருவேளை ஒன்றுக்கு மேலாக ஆண் குழந்தை பிறந்தால் அதில் ஒரு ஆண் குழந்தை உயிரிழக்கும் அல்லது கொடூரமான நோயால் பாதித்து உயிர் வாழவே போராடும். இப்படி தலைமுறை தலைமுறையாக ஒரே முறையில் தான் குழந்தைகள் பிறக்கின்றன என்பது அக்குடும்பத்தின் மீதான சாபத்தை தான் காட்டுவதாக கூறப்படுகிறது. 

இந்த சாபம் நீங்கி இருக்கும் ஒரு பிள்ளை ஆரோக்கியமாக, அடுத்த தலைமுறை தழைக்க சிவன் கோயிலுக்கு பரிகாரம் செய்வார்கள். அதாவது பிச்சை எடுத்து சிவன் கோயிலில் காணிக்கையாக செலுத்துவது தான் அந்த பரிகாரம்.  

சிவனே தஞ்சம்..! 

தலைமுறைகளாக உங்கள் மீது தொடர்ந்து வரும் சாபம் அல்லது ஜாதக தோஷம் நிவர்த்தி அடைய சிவன் தான் தஞ்சம். நம் கர்ம வினைகள் நீங்க சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்வது நல்ல பலன் தரும். புராணங்களில் சொல்லப்படும் கதைகளில் கூட தன்னை வருத்தி இறைவனிடம் சரணடையும் நபர்களுக்கு, கடும் தவம் புரிபவர்களுக்கு சிவபெருமான் வேண்டிய வரங்களை கொடுத்ததை நாம் அறிந்திருப்போம். தன்னையே தாழ்த்துபவர்களை சிவபெருமானிடம் உயர்த்துகிறார்.

ஒவ்வொருவரிடமும் பிச்சை வாங்குவது தன்னை மிக மிக தாழ்த்திக் கொள்ளும் செயல், அது கடவுள் முன் ‘நான் ஒன்றுமேயில்லை' என்ற நிலையை உணர்த்தும். இப்படி அனைத்தையும் உதறிவிட்டு யாசகம் எடுத்து அதை காணிக்கையாக சிவன் கோயிலில் செலுத்தும் போது, நம்முடைய எல்லா கர்ம வினைகளும் அகன்று, குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக தாக்கி வரும் சாபமும் தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். 

இதையும் படிங்க: குலதெய்வத்தை மாசி மகம் அன்று வழிபடலாமா? எப்படி வழிபட்டால் கோடி நன்மைகள் கிடைக்கும்..!

சிவனுக்கு இந்த பரிகாரத்தை செய்வது எப்படி? 

ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு ஆண் வாரிசு தான் பிறக்கிறது. ஆனால் அந்த ஒற்றை ஆண் பிள்ளைக்கும் ஆபத்து என்றால், அப்போது அந்த ஆண் வாரிசின் ஆரோக்கியம் மேம்பட்டு நீண்ட ஆயுளோடு வாழ பிச்சை எடுத்து சிவபெருமானுக்கு பரிகாரம் செய்யலாம். பிச்சை எடுத்த காசுகளை காணிக்கையாக சிவனுக்கு செலுத்த வேண்டும். குறிப்பாக 2 ஆண் குழந்தைகள் இருக்கும் தம்பதிகளிடம், ஒரு ரூபாயை பிச்சையாக வாங்க வேண்டும். அதை சிவனுக்கு காணிக்கையாக செலுத்தினால் குடும்பத்தை தாக்கி வந்த தோஷம் முற்றிலும் நீங்கும் என்பது ஐதீகம். நம்பி செய்யுங்கள்.  

இதையும் படிங்க: உங்க வீட்டில் பணம் இல்லை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.. வெள்ளிக்கிழமை இதை செய்தாலே போதும்..

Latest Videos

click me!