Today Rasipalan 4th Mar 2023: திடீர் சந்திப்பால் ஆதாயம் கிடைப்பது யாருக்கு? பண விஷயத்தில் யாருக்கு கவனம் தேவை?

Published : Mar 04, 2023, 05:30 AM IST

மார்ச் 4ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

PREV
112
Today Rasipalan 4th Mar 2023: திடீர் சந்திப்பால் ஆதாயம் கிடைப்பது யாருக்கு? பண விஷயத்தில் யாருக்கு கவனம் தேவை?
மேஷம்

மேஷம்:

எந்த வேலையையும் உணர்ச்சிவசப்படாமல் செய்யவும். உறவினர்களுடன் சுமூக உறவு இருக்கும். பொருளாதார பிரச்னையால் மன அழுத்தம் அடைய வேண்டாம். எல்லாம் விரைவில் சரியாகும். உடலில் வலி மற்றும் காய்ச்சல் ஏற்படலாம்.
 

212
ரிஷபம்

ரிஷபம்:

ஆன்மீக பணியில் ஈடுபடுவீர்கள். அது மன அமைதியை கொடுக்கும். சொத்து ரீதியான வேலைகள் நடந்தேறும். கவனக்குறைவு வேலையை பாதிக்கலாம். அதனால் கவனமாக இருக்கவும். ஆவண ரீதியான விஷயங்களில் அதிக கவனம் தேவை. காதலர்கள் திருமணத்தை நோக்கி நகர்வார்கள்.
 

312
மிதுனம்

மிதுனம்:

உங்கள் தினசரி வேலைகளில் சில மாற்றங்களை செய்வது, வேலையில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட உதவும். ஆபத்தான வேலைகளில் ஈடுபட வேண்டாம். தொழில் தொடர்பான விளம்பரங்களை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். மன அமைதிக்கு தியானம் செய்வது அவசியம்.
 

412
கடகம்

கடகம்:

அர்ப்பணிப்புடன் வேலை செய்யுங்கள். இன்றைய கிரக அமைப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. திடீர் சந்திப்பால் ஆதாயங்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும். உங்கள் திட்டங்களை யாரிடமும் சொல்லாதீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உங்க வீட்டின் ஏதோ ஒரு மூலையில் இந்த ஒரு அற்புத பொருளை வைத்தாலும் கூட போதும்.. கண்டிப்பா பணம் வந்து சேரும்

512
சிம்மம்

சிம்மம்:

இன்று செலவுகள் அதிகமாகும். சமூக வேலைகளில் நேரம் செலவிடுவீர்கள். அது உங்கள் தொடர்புகளை அதிகரிப்பதுடன், நல்ல அனுபவத்தையும் கொடுக்கும். தொழில் ரீதியாக இடமாற்றம் தேவை. 
 

612
கன்னி

கன்னி:

நெருங்கிய உறவினர் உங்கள் வீட்டுக்கு வருவார். கவர்ச்சிகரமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். சிறிய கவனக்குறைவு கூட பாதிப்பை தரலாம். எனவே கவனம் தேவை. தொழிலில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். ஏற்கனவே செய்த முதலீட்டு தொகையை திரும்பப்பெற இதுதான் சரியான நேரம். 
 

712
துலாம்

துலாம்:

மனதை சிதறவிட வேண்டாம். இளைஞர்கள் சோம்பேறித்தனத்தை தவிர்த்து ஆக்கப்பூர்வமாக செயல்படவும். அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்கவும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். தொழில் போட்டியாளர்களின் நடவடிக்கைகளை கவனிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்னைகள் தீரும்.
 

812
விருச்சிகம்

விருச்சிகம்:

உறவினர்களுடன் இருந்துவந்த பழைய பிரச்னை முடிவுக்கு வரும். ஆண்களுடனான உரையாடலின்போது பெண்கள் இன்றைய தினம் கவனமாக இருக்கவும். தொழிலில் சிறு பிரச்னை ஏற்படலாம். முகம் தெரியாத நபரை கவனமாக டீல் செய்யவும். அலுவல் ரீதியான பயணம் பலனளிக்கும். 

மாசி மகம் எப்போது? மகிழ்ச்சி தரும் அதன் மகத்துவம்.. ஏழு ஜென்ம பாவம் போக்கும் விரதம்..!

912
தனுசு

தனுசு:

அண்மைக்கால பிரச்னைகள் தீரும். அதனால் உங்கள் வேலையில் முழுக்கவனம் செலுத்துவீர்கள். தொழிலில் கடின உழைப்பு தேவை. திட்ட விரிவாக்கம் குறித்து ஆலோசிப்பீர்கள். கணவன் - மனைவி இடையேயான கருத்து வேறுபாடு நீங்கும்.

 

1012
மகரம்

மகரம்:

அரசியல்வாதிகள் மற்றும் முக்கியமான நபர்களிடமிருந்து ஆதாயம் கிடைக்கும். சகோதரர்களுடனான பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்வீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். தொழில் விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். கவனக்குறைவு பிரச்னைகளை ஏற்படுத்தும். தொழிலில் புதிய முதலீடுகளை செய்யலாம்.
 

1112
கும்பம்

கும்பம்:

உறவினர் அல்லது நண்பர் மூலம் நல்ல செய்தி வந்துசேரும். அதன்மூலம் ஆதாயம் கிடைக்கும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். தேவையற்ற செயல்களில் பணத்தை வீணடிக்க வாய்ப்புள்ளது. லோன் வாங்குவதற்கு முன் யாரிடமாவது ஆலோசனை செய்யுங்கள்.  தொழிலை விரிவாக்கம் செய்யும் திட்டமிருந்தால் தாராளமாக செய்யலாம்.
 

1212
மீனம்

மீனம்:

உங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடுங்கள். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வேலை முடிவுக்கு வரும். குடும்ப பிரச்னைகளை தீர்த்து மகிழ்ச்சியடைவீர்கள். எதிர்மறையான சிந்தனை கொண்ட நபர்களிடமிருந்து விலகியிருக்கவும். குடும்ப சூழல் நன்றாக இருக்கும்.
 

Read more Photos on
click me!

Recommended Stories