உங்க வீட்டில் பணம் இல்லை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.. வெள்ளிக்கிழமை இதை செய்தாலே போதும்..

First Published | Mar 3, 2023, 12:39 PM IST

வீட்டில் பணம் சார்ந்த பிரச்சனைகள் விலக.. குடும்பத்தில் அமைதி கிடைக்க சில விஷயங்களை செய்தால் போதும். 

பொதுவாகவே வீட்டு வருமானத்தை அதிகப்படுத்தவே நாம் முயற்சிப்போம். எந்த இடரும் இல்லாமல் பண வரவு வந்து கொண்டிருப்பதை பற்றியே யோசித்து கொண்டிருப்போம். ஆனாலும் ஏதோ ஒரு தடை வந்து பண வரவை தடுக்கும். இந்த பண பிரச்சனைகளில் இருந்து விடுபட மகாலட்சுமியின் அருள் நமக்கு இருந்தால் போதும். அதுமட்டுமில்லாமல் குபேரனின் அருளும் சுபிட்சமாக வேண்டும். இவர்களின் அருளை பெற்று செல்வ செழிப்பாக வாழ சில அற்புதமான பரிகாரங்கள் உள்ளன. அதை இந்த பதிவில் பார்ப்போம். 

இறைவன் கொடுக்க நினைப்பதை மனிதனால் தடுக்கவே முடியாது. குபேரன் மட்டும் ஒருவரது வீட்டில் தங்கிவிட்டால் அங்கு செல்வமானது கொட்டி தீர்க்கும். மகாலட்சுமி கடாட்சமும் குபேரன் அருளும் கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் சில விஷயங்களை செய்தாலே போதும். 

Tap to resize

நம்முடைய வீட்டில் ஊறுகாய் நிச்சயம் இருக்கணும் என முன்னோர் சொல்லி கேட்டிருப்பீர்கள். குபேரனுக்கு ஊறுகாய் மிக பிடித்தமானது என்பதுதான் அதற்கு காரணம். வீட்டு ஊறுகாய் ஜாடியில் எப்போதும் ஊறுகாய் வைத்து கொள்வது அவசியம். அப்படி இருந்தால் குபேரன் அருள் வீட்டில் எப்போதும் இருக்கும். 

சுமங்கலிகள் மனம் மகிழ்ந்தால் மகாலட்சுமியின் ஆசி உங்களுடைய வீடு தேடி வரும். வெள்ளிக்கிழமை வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு தண்ணீர் அருந்த கொடுங்கள். வீட்டுக்கு பக்கமாக காய்கறி, பழம் விற்கும் பெண்கள் இருந்தால் அவர்களுக்கு வேண்டிய நீராகாரம் கொடுக்கலாம். அவர்கள் உங்கள் கையால் அருந்தும் நீரால் அவர்களுடைய வயிறு குளிர்வது போல மகாலட்சுமியின் மனமும் குளிரும் என்பது ஐதீகம். 

வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் ஆகியவை அளியுங்கள். இதன் மூலமும் மகாலட்சுமியின் அருளை பெறலாம். வெள்ளிக்கிழமை அன்று மொச்சை கொட்டையை அவித்து வீட்டு பூஜை அறையில் அதை மகாலட்சுமிக்கு நெய்வேத்தியமாக படையுங்கள். அன்று வீட்டில் உள்ள அனைவரும் அதை உண்டால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். 

குடும்பம் பொருளாதாரத்தில் முன்னேறி செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் ஆண்டுதோறும் குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வ வழிபாடு முக்கியம். அவரவர் குல முறைப்படி குலதெய்வத்திற்கு பொங்கலிட்டு வழிபாடு செய்யவேண்டும். ஒருவருக்கு குலதெய்வ அருள் இல்லாமல் போனால் எந்த பரிகாரம் செய்தாலும் பலன் இருக்காது. அதனால் வெறும் பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு, குலதெய்வத்தை மறந்து போனால் எதுவும் நடக்காது என்பதை மறக்க வேண்டாம். 

இதையும் படிங்க: தொப்பை கிடுகிடுனு குறைய.. தினமும் காலையில் இந்த அற்புத டீ குடித்து பாருங்கள்..!

சிவனுக்கு பிடித்த வில்வ மரத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஓரையில் கொஞ்சம் பால் ஊற்றி வழிபட்டால் செல்வ வளம் செழித்து இருக்கும். வெள்ளிக்கிழமை குளியலின்போது, மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் பசுங்கோமியத்தை குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் கலந்து குளிப்பதன் மூலமும் லட்சுமி தேவியின் அருளை பெற முடியும் என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர்.  

இதையும் படிங்க: உங்க வீட்டின் ஏதோ ஒரு மூலையில் இந்த ஒரு அற்புத பொருளை வைத்தாலும் கூட போதும்.. கண்டிப்பா பணம் வந்து சேரும்

Latest Videos

click me!