பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் மும்மூர்த்திகள். பிரம்மா படைப்பவர் என்றால், விஷ்ணு பகவான் காப்பவர். சிவன் அழிப்பவர். இந்த உலகத்தில் படைக்கப்படும் ஒவ்வொரு உயிருக்கும் அவனாலேயே விதி நிர்ணயிக்கப்படுகிறது. பிறக்கும் போது, இவன் இந்த படிப்பு தான் படிப்பான், இந்த வேலை தான் செய்வான், இப்படி தான் மரணம் நிகழும் என்று எழுதி வைத்திருக்கிறான். அதைத் தான் ஜாதக கட்டமும் சொல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.