Today Rasipalan 5th Mar 2023: எந்த ராசிக்காரர்களுக்கு துணிவே துணை..? திறமையை முழுமையாக காட்ட வேண்டியது யார்..?

Published : Mar 05, 2023, 05:30 AM IST

மார்ச் 5ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

PREV
112
Today Rasipalan 5th Mar 2023: எந்த ராசிக்காரர்களுக்கு துணிவே துணை..? திறமையை முழுமையாக காட்ட வேண்டியது யார்..?

மேஷம்:

இன்று உங்களுக்கு முக்கியமான செய்தி வந்துசேரும். உங்கள் தனித்துவமான திறமையை வேலையில் காட்டுவீர்கள். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்படலாம். அதனால் சற்று கவனமாக இருக்கவும். தொழிலில் இருந்துவரும் போராட்டம் விரைவில் சரியாகும். கணவன் - மனைவி இடையேயான அன்யோன்யம் அதிகரிக்கும்.
 

212

ரிஷபம்:

உங்கள் வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் கனவுகளை நனவாக்க கடுமையாக உழைக்க வேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது ரொம்ப கவனமாக இருங்கள். அன்பிற்குரிய நபருடனான திடீர் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
 

312

மிதுனம்:

புதிதாக பொருட்கள் வாங்குவீர்கள். உங்கள் திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். நெருங்கிய உறவினர் தொடர்பான விரும்பத்தகாத செய்தி, உங்களுக்கு வருத்தத்தை அளிக்கலாம். பொருளாதார பிரச்னையால் எதிர்மறையான சிந்தனைகள் மனதில் தோன்றும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
 

412

கடகம்:

தொழிலில் எதிர்காலத்திற்கு தேவையான முதலீடுகளை செய்வீர்கள். கடினமான வேலைகளையும் உங்களது துணிச்சலால் செய்து முடிப்பீர்கள். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.  பொருளாதார மந்த நிலை இருக்கும். உங்கள் துணையின் ஆதரவால் பலம் பெறுவீர்கள்.
 

வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய.. சிறப்புவாய்ந்த நவகைலாய தலங்கள் எங்குள்ளது தெரியுமா?

512

சிம்மம்:

இன்று மன அமைதி ஏற்படும். அனுபவஸ்தர்களின் உதவியுடன் நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சில பிரச்னைகள் வரலாம். நெருங்கிய உறவினர்களுடன் இனிமையாக பழகுங்கள். ஃபோனில் வரும் நற்செய்தி மூலம் ஆதாயம் அடைவீர்கள். மனைவியின் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படலாம்.

612

கன்னி:


எந்த திட்டம் வைத்திருந்தாலும் இப்போது தொடங்குங்கள். உங்கள் உறவுகளை பலப்படுத்திக்கொள்ள இதுவே சரியான நேரம். உங்களையே மறந்து வேலை செய்வீர்கள். அதுவே ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகலாம். கோபப்பட வேண்டாம். கணவன் - மனைவி இடையே சிறிய விஷயத்திற்கு சண்டை நடக்கலாம்.
 

712

துலாம்:

பழைய நண்பரின் சந்திப்பதன் மூலம் மன நிம்மதி அடைவீர்கள். உறவினர்களிடமிருந்து கிஃப்ட் கிடைக்கலாம். மதியத்திற்கு மேல் உங்களை வருத்தப்பட செய்யும் செய்தி வரலாம். வேலையில் உங்கள் ஆதிக்கம் தான் இருக்கும்.

812

விருச்சிகம்:

ஆதரவில்லாதவர்களுக்கு உதவி செய்வீர்கள். வீட்டில் மாற்றங்கள் செய்வதற்கான திட்டங்கள் இருந்தால் செய்யலாம். வேலையில் கவனம் செலுத்தவும். இன்று முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். பணியாட்களுடன் சுமூக உறவை தொடரவும். 
 

912

தனுசு:

ஆன்மீக சிந்தனை ஏற்படும். அதன்மூலம் மன அமைதியும், நிம்மதியும் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத்தரம் உயரும். இளைஞர்கள் பிடித்த வேலையை செய்து மகிழ்வார்கள். வங்கி அல்லது முதலீடு சார்ந்த விஷயங்களில் மன அமைதி கெடலாம். தொழில் எந்த பிரச்னையும் இல்லாமல் வழக்கம்போல நடக்கும்.

அய்யா வைகுண்டரின் 191வது அவதார தினம்; குமரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
 

1012

மகரம்:

உங்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான சந்திப்புகள் நிகழும். தேவையில்லாத வேலைகளில் கவனம் செலுத்தாதீர்கள். அது உங்களது முக்கியமான வேலையை பாதிக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நீங்கள் அடைய விரும்பும் இடத்தை அடைய கடுமையாக உழைப்பீர்கள். கணவன் - மனைவி இடையேயான அன்யோன்யம் அதிகரிக்கும்.
 

1112

கும்பம்:

புதிய வேலைகளை திட்டமிடுவீர்கள். அதற்கான ஆதரவும் கிடைக்கும். பொருளாதார மந்த நிலை இருக்கும். அதனால் சில விஷயங்கள் தாமதமாகலாம். தொழிற்சாலைகள் நடத்துபவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே ஈகோ வேண்டாம்.
 

1212

மீனம்:

நீங்கள் நீண்டகாலமாக நினைத்துகொண்டிருக்கும் வேலை முடியும். அதனால் மகிழ்ச்சியடைவீர்கள். உங்களை நிரூபிக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அவசரப்பட்டால் அவதிப்படுவீர்கள். இப்போதிருக்கும் நெருக்கடியான சூழல் மாறும். அதனால் கவலைப்பட வேண்டாம். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். 
 

Read more Photos on
click me!

Recommended Stories