
மகாளய அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடும் நாளாகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும். ஆனால், அதில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகள் தான் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், இந்த மூன்று அமாவாசைகளில் ஏதாவது ஒன்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் தற்போது புரட்டாசி மாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாதத்தில் வரும் அமாவாசையே மகாளய பட்ச அமாவாசை எனப்படும். இந்த அமாவாசையானது மகாளய பட்சத்தின் நிறைவு நாளில் வரும்.
மகளாய பட்சம்:
மகளாய பட்சம் என்பது முன்னோர்களின் நினைத்து வழிபட்டு அவர்களது ஆத்மாவை திருப்தியடைய வைக்கும் நாள் என்பதால், இந்நாளில் முன்னோர்களுக்கு வழங்கும் திதி, தர்ப்பணம் ஆகியவற்றை அவர்கள் பூலோகத்தில் இருந்து பூமிக்கு நேரடியாகவே வந்து ஏற்பதாக நம்பிக்கை. அதில், பட்சம் என்றால் 15 நாட்கள் ஆகும். இந்த 15 நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் கண்டிப்பாக மகாளய பட்சம் அமாவாசை நாளில் கண்டிப்பாக தர்ப்பணம் வழங்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லுகின்றது.
அப்படி முன்னோர்களுக்கு விரதமிருந்து தர்ப்பணம், தானம் வழங்கினால் பித்ரு தோஷம், பித்ரு சாபம் என வாழ்க்கையில் இருக்கும் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி, பித்துருக்கள் ஆசியுடன் தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் புரட்டாசி மாதம் வரும் அமாவாசை வரை அந்த 15 நாட்களும் மிகவும் முக்கிய காலமாக கருதப்படுகிறது.
மகாளய பட்ச அமாவாசை 2024 எப்போது?
இந்த 2024 ஆம் ஆண்டில் அக்டோபர் இரண்டாம் தேதி புதன்கிழமை அன்று மஹலாய பக்ஷ அமாவாசை வருகின்றது.
அமாவாசை திதி தொடங்கும் நேரம் :
01 அக்டோபர் - இரவு 10.35 மணிக்கு
அமாவாசை திதி முடியும் நேரம் :
03 அக்டோபர் - மதியம் 12.34 மணிக்கு
எமகண்ட நேரம் :
02 அக்டோபர் - காலை 07.30 மணி முதல் 00.09 மணி வரை
ராகு காலம் :
02 அக்டோபர் - பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை
தர்ப்பணம் கொடுக்க நல்ல நேரம் :
02 அக்டோபர் - காலை 06.04 மணி முதல் 07.25 மணி வரை. அதுபோல, காலை 09.05 மணி முதல் 11.55 மணி வரை
இதையும் படிங்க: மகாளய அமாவாசை, பிரம்மோத்ஸவம் சிறப்பு பேருந்துகள்! எங்கிருந்து இயக்கம்! இதோ முழு தகவல்
மகாளய அமாவாசை வழிபடும் முறை :
மகாளய அமாவாசை நாளில் விரதம் இருந்து சூரிய உதயத்திற்கு பிறகு சூரியனுக்கு தண்ணீர் வழங்கி வழங்கிவிட்டு, பிறகு பித்தர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஒருவேளை உங்களால் நீர்நிலைகளில் சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டால் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
அதுபோல காகத்திற்கு சாதம் வழங்கிவிட்டு பிறகு தான் நீங்கள் சாப்பிட வேண்டும் மேலும் மாலை 6 மணிக்கு பிறகு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் இருக்கும் முன்னோர்களின் படத்திற்கு முன்பு ஒரு மண் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி முன்னோர்களை மனதார வழிபட வேண்டும் இப்படி செய்வதன் மூலம் முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இது தவிர, முன்னோர்களின் ஆசி குடும்பத்தில் நிலைத்து இருக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றது.
இதையும் படிங்க: மகாளய பட்ச நாட்களில் ஆண்கள் தவறுதலாக கூட செய்யக் கூடாத விஷயங்கள் என்னென்ன?