Tirupati Temple
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பார்கள். இதன் காரணமாக உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் பசியை போக்கும் வகையில் உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் செய்யப்படுகிறது.
Animal Fat in Tirupati Laddu
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் லட்டு விவகாரம் கடந்த ஒரு வாரமாகவே பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோயில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டாத அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இதனை திட்டவட்டமாக மறுத்து அரசியல் ஆதாயத்திற்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த குற்றச்சாட்டை முன்வைப்பதாக கூறினர்.
Tirupati Laddu Controversy
இதனையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை குஜராத்தில் உள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றிக் மற்றும் மாட்டுக் கொழுப்பும், மீன் எண்ணெய், சோயா பீன், சூரிய காந்தி, பாமாயில் கலந்து இருப்பதும் உறுதியானது.
Tirupati News

Tirumala Tirupati Devasthanams
இந்த சர்ச்சைகளுக்கு இடையே திருப்பதி தேவஸ்தானம் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் இந்து அல்லாத வேற்று மதத்தவர்கள் அங்குள்ள மத பதிவேட்டில் தங்களுக்கு ஏழுமலையான் மீது நம்பிக்கையும் கவுரவமும் உள்ளது என குறிப்பிட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து அதில் கையெழுத்திட்ட பின்னரே சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.