லட்சுமி யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பொற்காலம்!! சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் வரும்!!

First Published | Jun 8, 2023, 11:00 AM IST

Lakshmi Yoga 2023: லட்சுமி யோகத்தால் ஜூலை மாதம் 07ஆம் தேதி வரை 4 ராசிக்காரர்கள் நல்ல யோகத்தை பெறுகிறார்கள். 

காதல், செழிப்பு, அழகு போன்றவற்றின் அம்சமாக இருப்பவர் சுக்கிரன். இவர் மே மாத கடைசியில் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்குள் பிரவேசித்தார். அப்படி சுக்கிர பகவான் கடக ராசிக்குள் சஞ்சாரம் செய்வது மங்களகரமான யோகம் என நம்பப்படுகிறது. இந்த யோகத்தின் பலன் ஜூலை 07 ஆம் தேதி வரை நீடிக்கும். சுக்கிரனால் ஏற்பட்ட லட்சுமி யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் பலன் பெறுவார்கள் என்று இங்கு பார்ப்போம். 

மேஷம்:

இந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெருகும். இவர்கள் எந்த துறையில் பணி செய்தாலும் அங்கு வெற்றியே கிட்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு பெரிய ஒப்பந்தம் இந்த நேரத்தில் கை கூடலாம். முதலீடு செய்திருப்பவர்களுக்கு கணிசமான லாபம் கைக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த காலம் சிறப்பானதாக அமையும். சிலருக்கு வீடு மனை வாகனம் வாங்கும் வாய்ப்புகள் அமையலாம். 

Tap to resize

கடகம்: 

இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக நன்மைகள் பெருகும். வீட்டில் உள்ளவர்களுடன் நேரம் செலவிடுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இழுபறியாக இருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள் இப்போது செய்யலாம். சமுதாயத்தில் உங்களுக்கு அந்தஸ்து உயரும். 

கன்னி: 

இந்த ராசிக்கு லட்சுமி யோகம் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையான நேரம் செலவிட வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். உங்களுடைய வருமானம் உயரும். புதியதாக வருமான ஆதாரங்கள் உருவாக வாய்ப்புள்ளது. மாணவர்களின் படிப்பில் முன்னேற்றம் காணுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். 

மகரம்: 

மகர ராசியினருக்கு பொருளாதார ரீதியாக மாற்றங்கள் ஏற்படும். பலவீனமாக இருந்த நிதிநிலை இப்போது மேம்பாடு அடையும்.  கடன் தொல்லை நீங்கும். நிலுவையில் இருக்கும் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இதுவரை உங்களுடைய வேலையில் இருந்து சுணக்கங்கள் எல்லாம் நீங்கி போகும். நீங்கள் கடினமாக உழைத்ததற்கான பலனை இப்போது பெறுவீர்கள். லட்சுமி யோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். 

இதையும் படிங்க: செல்வ செழிப்பா வாழ இந்த 7 விலங்குகளில் ஒன்றை வளர்த்தாலும் போதும்!!

Latest Videos

click me!