நீங்கள் அரசாங்க வேலைக்காக முயற்சி செய்றீங்களா? அப்போ இந்த பரிகாரத்தை ஒருமுறை மட்டும் செய்யுங்க..!!

Published : Jun 07, 2023, 12:10 PM ISTUpdated : Jun 07, 2023, 12:17 PM IST

அரசாங்க வேலைக்காக முயற்சி செய்பவர்கள் இந்த பரிகாரத்தை நீங்கள் ஒரே ஒரு முறை மட்டும் செய்தால் நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்த வேலை உங்களுக்கு கிடைக்கும்.

PREV
15
நீங்கள் அரசாங்க வேலைக்காக முயற்சி செய்றீங்களா?  அப்போ இந்த பரிகாரத்தை ஒருமுறை மட்டும் செய்யுங்க..!!

வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கும் இந்த காலத்தில் அரசாங்க வேலை கிடைப்பது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் தான். ஆனால் சிலருக்கு வேலை என்றால் அது அரசாங்க வேலையாக தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு. அரசாங்க வேலைக்காக அவர்கள் பலவழிகளில் முயற்சி செய்வது உண்டு. இந்நிலையில் ஜோதிடம் படி, நீங்கள் ஒரு பரிகாரத்தையும் செய்யும் போது உங்களுடைய முயற்சிகள் பலன் அளிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். அது என்ன பரிகாரம் என்று இங்கு பார்க்கலாம்.
 

25
அரசு வேலை கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்:

சூரிய நமஸ்காரம்:
அரசு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு முதலில் சூரிய பகவானின் அனுகிரகம் கிடைக்க வேண்டும். எனவே, வேலைக்கான முழு பலனையும் கொடுக்கக் கூடிய கடவுள் அவரே. நீங்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஏழு மணிக்கு முன்பாக அவரை வணங்கவும். அவ்வாறு வணங்கும் போது உங்கள் இரண்டு கைகளாலும் தண்ணீரை எடுத்து அவர் மீது ஊற்றி அபிஷேகம் செய்வது போல, தரையில் ஊற்ற வேண்டும். இதனுடன், நீங்கள் 'ஓம் சூர்யாய நமஹ' என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும். இவ்வாறு நீங்கள் இதனை தொடர்ந்து செய்து வந்தால், அரசாங்க வேலைக்கான வாய்ப்புகள் உங்களை தேடி அதிகமாக வரும்.

35

ஹனுமானை வழிபடவும்:
அது போலவே அரசாங்க வேலைக்கு உறுதுணையாக இருக்கும் இன்னொரு தெய்வம் ஹனுமான் தான். நீங்கள்  இவரையும் தொடர்ந்து வழிபட வேண்டும். மேலும் அனுமன் சாலிசாவையும் தொடர்ந்து படிக்க வேண்டும். இதை படிக்கும் போது வேலைக்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

இதையும் படிங்க: திருமணம் முறிவதற்கு என்ன காரணம்? ஜோதிட சாஸ்திரம் கூறுவது என்ன?

45

சிறிய பரிகாரம்:
உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த ஒரு சிறிய பரிகாரத்தை செய்யுங்கள். இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில்
ஒரு சிறிய துண்டு படிகார கல், மூன்று மிளகு, இரண்டு சிறிய துண்டு பட்டை எடுத்து கொள்ளவும். இவற்றை உங்களது வலது கையில் வைத்து இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் தலையை சுற்றி 21 முறை சுற்றி கொள்ளுங்கள். பிறகு அந்த பொருளை கால் படாத இடத்தில் அல்லது ஓடும் நேரில் போடவும்.

55

வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வழங்க வேண்டும்:
இந்த பரிகாரத்தை செய்ய, தினமும் மூன்று மஞ்சள் வாழைப்பழத்தை பசு மாட்டிற்கு சாப்பிட கொடுக்கவும். அது போலவே பறவைகளுக்கு தினமும் தானியங்களை கொடுக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம்  வாய்ப்புகள் உங்களுக்கு விரைவில் கைக் கூடும். அதன் படி, கடவுள்களின் ஆசிர்வாதமும் ஜீவராசிகளுக்கு நீங்கள் செய்யும் தானமும் அரசு வேலைக்கான வாய்ப்பை உங்களுக்கு அதிகரிக்க செய்யும். மேலும் இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள், இங்கு குறிப்பிட்டுள்ள வழிமுறைகளுடன் உங்களுடைய முயற்சிகளையும் தொடர்ந்து செய்தால் வந்தால் அரசாங்க வேலைக்கான வாய்ப்புகள் உங்களுக்கு நிச்சயம் கை கூடும்.

Read more Photos on
click me!

Recommended Stories