சூரிய பகவான் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகிய ஆனியில், அதாவது ஜூன் மாதத்தில் பலன் பெறும் ராசிகளின் விவரம்..
மேஷம்:
சூரியன் மூன்றாமிடத்தில் பயணம் செய்யும் இந்த நேரத்தில் உங்களுடைய புதிய முயற்சியில் உங்களுக்கு வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கும். வெளியூருக்கு போகும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் காணும். உங்களுடைய பேச்சால் எல்லோரையும் ஈர்ப்பீர்கள். பிறரோடு தகவல் பரிமாறும் நிலை மாறும். இந்த மாதம் நீங்கள் புது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குழந்தைகள் வழியில் நல்ல செய்திகள் வரலாம். நினைத்த காரியம் நடக்கும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். உடலில் சோம்பல் விலகி சுறுசுறுப்பு கூடும். நிதி பிரச்சனைகளில் நண்பர்கள், வாழ்க்கை துணையின் உதவிகளை பெறுவீர்கள்.