கிருஷ்ண ஜெயந்தி நாளில் இதை செய்தால் போதும்.. செல்வம் பெருகும், பண பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்!

First Published | Sep 6, 2023, 10:27 AM IST

வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளும் உங்கள் நிதி நிலைமையை எதிர்மறையாக பாதிக்கும்

ஜோதிடர்கள் ஜாதகத்தைப் பார்த்து நமது எதிர்காலத்தைக் கணிக்கிறார்கள். ஒருவர் ஜாதகத்தில் ஏற்படும் அசுப பலன்களால் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளும் உங்கள் நிதி நிலைமையை எதிர்மறையாக பாதிக்கும். உங்களின் நிதி நிலையும் சரியில்லை என்றால், கிருஷ்ண ஜெயந்தி அன்று பிரியாணி இலைகளைக் கொண்டு இந்த செயல்களைச் செய்தால் செல்வம் பெருகும். மேலும் பண பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்..

வருமானமும் செல்வமும் பெருக வேண்டுமானால் கிருஷ்ண ஜெயந்தியான இன்று அதிகாலையில் குளித்துவிட்டு. பிறகு கிருஷ்ணரை தியானம் செய்து வழிபடுங்கள். அதன் பிறகு ஒரு பிரியாணி இலையை எடுத்து கிருஷ்ணரை வணங்குங்கள். இப்போது பிரியாணி இலையை உங்கள் பர்ஸில் வைக்க வேண்டும். இப்படி செய்வதால் பர்ஸில் பணத்துக்கு பஞ்சம் வராது. உங்கள் பர்ஸில் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்கும்.

Tap to resize

வாஸ்து தோஷம் இருந்தாலும், கிருஷ்ண ஜெயந்தி அன்று குளித்த பின் முதலில் கிருஷ்ணரையும், ராதையையும் வணங்குங்கள். பின்னர் உங்கள் பிரச்சனையை ஒரு பிரியாணி இலையில் எழுதி எரிக்கவும். இப்போது அதன் சாம்பலை ஆற்றில் கலந்துவிட வேண்டும். இதைச் செய்யும்போது வெளியாட்கள் யாரும் வீட்டில் இருக்கக் கூடாது என்பதை  நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால், கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் கிருஷ்ணர் மற்றும் ராதையை வழிபட்ட பிறகு 3-5 வீட்டில் சாம்பிராணி போடும் போது பிரியாணி இலைகளை அதில் சேர்க்கவும்.வீடு முழுவது அந்த சாம்பிராணி புகையை காட்டவும். இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கும்.

bay leaf

உங்களுக்கு நிறைய கடன்கள் இருந்தால்.. கிருஷ்ண ஜெயந்தி பிரியாணி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது கடனில் இருந்து விடுபட கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்யுங்கள். கடனில் இருந்து நிவாரணம் கிடைத்த பிறகு பிரியாணி இலையை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் வருமானமும், செல்வமும் படிப்படியாக அதிகரிக்கும். மேலும் கடனில் இருந்து விடுபடலாம்.

Latest Videos

click me!