மயிலாடுதுறை ஆதி வைத்தியநாத சுவாமி திருக்கோவில்.. கோலாகலமாக நடந்து முடிந்த மகா கும்பாபிஷேகம்!

Ansgar R |  
Published : Aug 20, 2023, 11:34 AM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதி வைத்தியநாத சுவாமி திருக்கோவில் இன்று ஆகஸ்ட் 20ஆம் தேதி காலை 7 மணிக்கு துவங்கி தற்பொழுது கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

PREV
13
மயிலாடுதுறை ஆதி வைத்தியநாத சுவாமி திருக்கோவில்.. கோலாகலமாக நடந்து முடிந்த மகா கும்பாபிஷேகம்!

ஆதி வைத்தியநாத சுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின் படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் என்கின்ற கிராமத்தில் குடி கொண்டிருக்கும் சிவஸ்தலம் ஆகும் இந்த ஆதி வைத்தியநாத சுவாமி கோவில். 

மூலவர் பெயர் ஆதி வைத்தியநாதர், அம்பாள் பெயர் பாலாம்பிகை, மேலும் கோவிலில் சுற்றி பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள் எனப்படும் ஐந்து வைத்தியநாதசுவாமி கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று இந்த கோவில். இது தற்பொழுது சீர்காழி பக்கத்தில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு முன்பாகவே கட்டப்பட்ட தலம் என்று கருதப்படுகிறது.

Today Rasi Palan 20th August 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நிலைமை நன்றாக இருக்கும்..

23

எனவே தான் இவருக்கு ஆதி வைத்தியநாதன் என்று பெயர் ஏற்பட்டது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது திருவாசகத்தில் கீர்த்தி திருவகர்கள் என்கிற பகுதியில் இந்த தலைப்பினை பற்றி ஒரு குறிப்பு இருக்கிறது என்றும் இந்த கோவில் குறித்து கூறப்பட்டுள்ளது. 

33

இந்நிலையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை வழிகாட்டுதலின்படியும் கிராமவாசிகளின் ஒத்துழைப்புடனும் மேற்படி ஆலயங்களில் கும்பாபிஷேகம் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்று இருக்கிறது. அதே சமயம் பக்த கோடிகள், மெய் அன்பர்கள் மற்றும் கிராமவாசிகள் அனைவரும் வந்து இந்த மகா கும்பாபிஷேகத்தில் திரளாக கலந்து கொண்டு, நிதி உதவி அளித்தும் சிறப்பிப்பதற்காக நன்றி தெரிவித்துள்ளது நிர்வாகம்.

சனிப்பெயர்ச்சி 2023: இந்த ராசிக்காரர்களின் ஜாக்பாட் அடிக்கப் போகுது!

click me!

Recommended Stories