குரு பெயர்ச்சி பலன்கள் 2023: இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம்!! பணத்துக்கு பஞ்சமே இருக்காது!!

First Published | Jun 3, 2023, 11:40 AM IST

Guru Peyarchi Palangal 2023: குரு பெயர்ச்சி அடைந்து மேஷ ராசியில் சஞ்சரித்துள்ளதால் அதிர்ஷ்டம் காணும் ராசிகளை இங்கு காணலாம். 

கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதியில் குரு பகவான் மேஷ ராசிக்கு சென்றார். இந்தாண்டு முழுவதும் அந்த ராசியில் குரு பகவான் இருப்பதால் சில ராசிகளுக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இங்கு காணலாம். 

மேஷம் 

மேஷத்தில் தான் குரு பகவான் அமர்ந்துள்ளார். இதனால் மேஷ ராசியினருக்கு தைரியம், வீரம் ஆகியவை அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பண வரவு அமோகமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் நேரம் செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். 

Tap to resize

மிதுனம்

குரு பெயர்ச்சி காரணமாக மிதுன ராசியினருக்கு வியாபாரம், தொழில் ஆகியவை மேம்படும். பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்த காலம் உகந்ததாக இருக்கும். உங்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதியதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இது புதிய தொழில், வேலை ஆகிவற்றை தொடங்க நல்ல நேரம். 

சிம்மம் 

சிம்ம ராசிக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது. நீங்கள் செய்த முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கலாம். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சனைகள் நீங்கி பணவரவு அதிகரிக்கும். 

இதையும் படிங்க: தெரியாம கூட இந்த 4 பொருட்கள கீழ போட வேண்டாம்.. மீறினா வீட்டுல கெட்டது நடக்கலாம்!!

தனுசு 

மேஷ ராசிக்கு குரு பெயர்ச்சி அடைந்துள்ளதால், தனுசு ராசியினருக்கு நல்ல பலன்களை அள்ளித் தருகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். தொழில், வியாபாரம் சிறக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மரியாதை கூடும். எதிரிகள் உங்கள் முன் நிற்க கூட முடியாத சூழ்நிலை உருவாகும். உடல்நலம் மேம்படும். குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.  

இதையும் படிங்க: Vastu Tips: வீட்டுல செல்வம் குவியணுமா? வாழை மரம் இப்படி வச்சு பாருங்க!! உங்களுக்கான வாஸ்து டிப்ஸ்!!

Latest Videos

click me!