Vaccines: குழந்தைகளுக்கு கட்டாயம் போட வேண்டிய தடுப்பூசிகள் என்னென்ன தெரியுமா?

First Published | Apr 25, 2023, 4:07 PM IST

Children Vaccines: குழந்தைகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் தடுப்பூசிகள் போட்டு கொள்வதால் ஆபத்தான நோய்கள் அவர்களை தாக்காமல் விலகிவிடும். 

பெற்றோரின் பொறுப்பு குழந்தையின் ஆரோக்கியமான வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளது. குழந்தையின் ஒன்பது மாதங்கள் வரையிலும் ஒவ்வொரு தாயின் வாழ்க்கையில் பல இன்னல்களை கடந்துவர வேண்டியிருக்கும். போதுமான தூக்கமின்றி எத்தனையோ தாய்களை நாம் பார்க்கிறோம். ஆனால் இந்த சிக்கலான வாழ்க்கை முறையிலும் குழந்தைக்கு அன்பு, அரவணைப்புடன் தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியமான தேவையாக உள்ளது. அதை தாயும், தந்தையும் மறக்கக் கூடாது. 

சிறு குழந்தைகளுக்கு தடுப்பூசி போட சில பெற்றோர் தயங்குகின்றனர். ஏனென்றால் ஊசி போடும் போது குழந்தைக்கு வலி அதிகமாக இருக்கிறது. அப்படி வலியால் குழந்தைகள் துடிக்கும்போது, பெற்றோரின் இதயமும் வலியை உணர்கிறது. ஆனால் பல வகையான கடுமையான நோய்களைத் தடுக்க குழந்தைக்கு தடுப்பூசி போடுவது கட்டாயம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். என்னென்ன தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

Tap to resize

வேரிசெல்லா தடுப்பூசி 

குழந்தைகளுக்கு சின்னம்மை நோய் (சிக்கன் பாக்ஸ், வேரிசெல்லா) தோலில் சொறி, அரிப்புடன் தொடங்குகிறது. இதனால் காய்ச்சல் வரவும் வாய்ப்பு உள்ளது. சிக்கன் பாக்ஸைத் தடுக்க, வேரிசெல்லா தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம். இந்தத் தடுப்பூசியின் முதல் டோஸ் 12-18 மாத வயதுடைய குழந்தைகளுக்கும், இரண்டாவது டோஸ் 4-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் போடப்படுகிறது. 

எம்.எம்.ஆர் (MMR)

குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகளில் எம்.எம்.ஆர் (Mmr Injection) அவசியமானது. தட்டம்மை நோயில் இருந்து காக்க உதவுகிறது. இதனை சுமார் 11-12 வயதுள்ள குழந்தைகளுக்கு போடலாம். இது இரண்டு டோஸ்களைக் கொண்டுள்ளது. இது 6 மாத இடைவெளியில் போடப்படும்.  

ஹெபடைடிஸ் ஏ 

கோடையில் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பொதுவாக ஏற்படுகிறது. இந்த நோய் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மிகவும் ஆபத்தானது. இதைத் தடுக்க 'ஹெபடைடிஸ் ஏ' தடுப்பூசி மிகவும் முக்கியமானது. MMR ஐப் போலவே, ஹெபடைடிஸ்-ஏ ஆறு மாத இடைவெளியில் இரண்டு முறை போடப்படும். 

டிடிபி (DTP) 

இந்த தடுப்பூசியின் முழுப் பெயர் டிப்தீரியா-டெட்டனஸ்-பெர்டுசிஸ். இதை குழந்தைகளுக்கு போடுவதால் டெட்டனஸ் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். இந்த நோய் தாக்கினால் குழந்தைக்கு உணவு எடுத்து கொள்வதில், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு நிமோனியா அல்லது பிற பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த தடுப்பூசி டெட்டனஸ் தொற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. இந்த தொற்றுநோயைத் தடுக்க, 11 வயதில் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும். 

இதையும் படிங்க: Tea: அடிக்கடி டீ குடிக்கிறீங்களா? அந்த நேரத்துல இந்த 5 உணவுகளை எடுத்துக்காதீங்க! உடம்பு தாங்காது!!

டைபாய்டு தடுப்பூசி 

குழந்தைகளின் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, எளிதில் வைரஸ் தொற்று ஏற்படுகிறது. டைபாய்டு காய்ச்சல் குழந்தைகளை எளிதில் தாக்கும். இந்த நோயைத் தடுக்க, பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதங்களில் இந்த தடுப்பூசியை ஒரு டோஸ் கொடுக்கலாம். 

எச்.பி.வி (HPV) 

ஒருவரை எச்.பி.வி. வைரஸ் தாக்கினால் தோலில் அரிப்பு அல்லது மருக்கள் பிரச்சனை ஏற்படும். இதற்கு எதிராக இந்த தடுப்பூசி 11-12 வயது குழந்தைகளுக்கு போடவேண்டும். இந்த தடுப்பூசி 6 மாத இடைவெளியில் இரண்டு டோஸ்களாக செலுத்தப்படுகிறது. 

மருத்துவர்களின் முறையான வழிகாட்டல்களுடன் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம். 

இதையும் படிங்க: Sleeping direction: எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்? வாஸ்து என்ன சொல்கிறது?! எந்த திசை ஆபத்து!!

Latest Videos

click me!