திருமண வயதை கடந்து திருமணம் கைகூடாமல் இருக்கும் பிள்ளைகளை நினைத்து அவர்களது பெற்றோர் வேதனைப்படுகிறார்கள். சிலருக்கு சில சமயங்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வேறு சில காரணங்களால் திருமணம் நின்று போகும். மேலும் சிலருக்கு ஜாதகத்தில் இருக்கும் சிறிய சிறிய தோஷதால் நல்ல வரன் கிடைக்காமல், திருமணம் தள்ளிப்போகலாம். எனவே ஜோதிட சாஸ்திரப்படி, திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூட சில பரிகாரங்களை செய்ய வேண்டும். இந்த பரிகாரங்களை செய்தால் விரைவில் திருமண பந்தத்தில் இணையலாம்.
திருமண தடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்:
பெண்ணின் திருமணம் தடை நீங்க 16 திங்கட் கிழமை விரதமிருந்து சிவபெருமான் மற்றும் துர்க்கை தேவியை ஜலாபிஷேகம் செய்து வணங்கிவரவும். சிவனை வழிபடும் போது பார்வதி தேவியின் நல்லருள் விரைந்து உங்களுக்கு கிடைக்கும். திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.
சனி தோஷம் இருந்தால் திருமண யோகம் தாமதமாகும். தான, தர்மங்கள், நற்செயல்கள் சனி தோஷத்தைப் போக்கக்கூடியதாக இருக்கும். மேலும் சனிபகவானை குளிர்ச்சியாக்க தர்மம் செய்யலாம்.
கோயில்களில் கொடுக்கப்படும் பிரசாதத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில், ஒருவரின் பசியைப் போக்கி, அவரின் வயிறார கொடுக்கக்கூடிய வாழ்த்து நம்முடைய தலைமுறையைகாக்கும். மேலும்
உணவுக்காக கஷ்டப்படுபவர்களுக்கு, அன்ன தானம் கொடுப்பது மிகவும் சிறந்தது.
கோமாதாவின் உருவாகப் பார்க்கப்படும் பசுவிற்கு பச்சை உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
இதனால், திருமண தாமதம் விரைவாக தீரும். பசுவிற்கு கீரை, புல் தீவனம் அளித்து திருமண யோகமும், நம் கர்ம வினையையும் தீர்த்துக் கொள்ளலாம்.
திருமண யோகத்தை வழங்கக்கூடியவர் குரு பகவான். திருமண வயதை அடைந்தவர்கள் வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடையை கட்டாயமாக அணிய வேண்டும். மேலும் திங்கட்கிழமைகளில் சிவாலயத்தில் சென்று வழிபட வேண்டும்.
அது போலவே, ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 6 முதல் 9 மணிக்குள் அரசரமர விநாயகரை வழிபட்டு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
திருமண சுகத்தை தரக்கூடியவர் சுக்கிர பகவான். எனவே, தினமும் காலையில் குளித்து சுத்தமாகி, வீட்டில் பூஜை அறையில் குல தெய்வத்தையும் மற்ற தெய்வங்களை வழிபட்டு, "ஓம் ப்ரும் பிருஹஸ்பதயே நம" என்ற மந்திரத்தை தினமும் 3 முறை உச்சரிக்க வேண்டும். அவ்வப்போது உச்சரித்தால் திருமணத்தடை நீங்கி, விரைவில் நல்ல வரன் கிடைக்கும்.