சீக்கிரம் கடன் அடைபட! செவ்வாய்கிழமை இந்த எளிய பரிகாரம் செய்யுங்க! முருகபெருமான் உடனே உதவுவார்!

First Published | Apr 25, 2023, 12:55 PM IST

செவ்வாய்க்கிழமை அன்று சில எளிய பரிகாரங்களை செய்தால் விரைவில் கடனை அடைத்து விடலாம் என நம்பப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமையின் சிறப்புகள் இதோ! 

எவ்வளவு சம்பாதித்தாலும் வரவும் செலவும் சிலருக்கு சரியாக இருக்கும். சேமிப்பு என்பது உப்புக்கும் இருக்காது. ஆனால் சிலருக்கு வரவை மீறியும் அதிக செலவுகள் ஏற்பட்டு, கடன் போன்ற பிரச்சனைகள் வந்துவிடும். இதனால் நிம்மதியாக வாழ முடியாமல் திணறுவர். இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு தீர்வுகளை முருகப்பெருமான் அருள்வார். அவருடைய வழிபாட்டிற்கு ஏற்ற தினம் செவ்வாய்க்கிழமை. அன்றைய நாளில் கடன் பிரச்சனைகள், பணி தொடர்பான பிரச்சனைகளை நினைத்து முருகனை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை அன்று நல்ல செயல்களை தொடங்க ஏற்ற நாள் இல்லை என்பது பாரம்பரியமாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் வழிபாடு, பூஜைகளுக்கு ஆற்றல் அதிகம் என்பது ஐதீகம். 

செவ்வாய்க்கிழமை அன்று வரும் ராகு காலத்தில் அம்மன் துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் திருமண தடை விலகும். எப்பேர்ப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக தீரும் என்பது ஐதீகம். அதேபோலவே துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சை மாலை போட்டு வழிபாடு செய்தால் நல்ல வேலை கிடைக்கும். நம்முடைய கடன் பிரச்சினைகள் தீரும் என ஆன்மீகப் பெரியோர் கூறுவார்கள். 

Tap to resize

செவ்வாய்க்கிழமை பரிகாரம் 

எவ்வளவு அடைத்தாலும் தீராத கடன் சுமை இருப்போர் செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் ஒரு எளிய பரிகாரத்தை செய்தால் அவர்களுடைய மொத்த கடனும் அடைவதற்கான வழிகள் கிடைக்கும். செவ்வாய்கிழமையில் வருகின்ற செவ்வாய் ஹோரையில் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். அந்த ஒரே நாளில் மூன்று வகையான பரிகாரங்களையும் செய்தால் மட்டுமே முழு பலனையும் பெறலாம். 

முதல் செவ்வாய் ஹோரை! 
செவ்வாய்க்கிழமை அன்று காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் செவ்வாய் ஹோரை இருக்கிறது. அப்போது பாசிப்பயறு அல்லது பச்சை பயிறு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் வெல்லம் போட்டு, பாயாசம் செய்து பூஜை அறையில் சுவாமிக்கு படைக்க வேண்டும். வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி "எங்களுடைய வீட்டின் கடன் சுமைகள் விரைவில் அடைபடுவதற்கான வழி வாய்ப்பை எங்களுக்கு கண்முன்னே காட்டுங்கள்" என குலதெய்வம், இஷ்ட தெய்வம் எல்லாரிடமும் பிரார்த்தனை செய்ய வேண்டும். 

இரண்டாவது செவ்வாய் ஹோரை! 

இரண்டாம் செவ்வாய் ஹோரை, செவ்வாய்க்கிழமையன்று பகல் பொழுதில் 1 மணி முதல் 2 மணி வரை இருக்கிறது. அப்போது பச்சரிசியை சுத்தம் செய்து, அதனுடன் பச்சைப்பயிறு வெல்லம் ஆகிவற்றை கலந்து வீட்டு பூஜை அறையில் வீற்றிருக்கும் சுவாமி படத்தின் முன்பு வைக்க வேண்டும். பின்னர் " நாங்கள் கோமாதாவிற்கு செய்யும் இந்த தானத்தை ஏற்று எங்களுடைய கடன் சுமை குறைந்து நிம்மதியான வாழ்க்கை கிடைக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் அருள் புரிய வேண்டிக்கொள்கிறோம்"என மனதினுள் பிரார்த்தனை செய்ய வேண்டும். 

இதையும் படிங்க: செவ்வாய் பெயர்ச்சி 2023... இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்!! கூடவே நல்ல நேரமும் பொறக்க போகுது!!

உங்களுடைய வீட்டில் யாரின் பெயரில் அதிகமான கடனை வாங்கி இருக்கிறீர்களோ? அவர்களின் கையால் பாசிப்பயறு வெல்லம் கலந்த பச்சரிசியை கோமாதாவிற்கு தானமாக கொடுங்கள். பசு மாட்டிற்கு இந்த தானத்தை செய்த பிறகு தான் அன்றைய தினம் பகலில் உணவு சாப்பிட வேண்டும். ஒருவேளை நீங்கள் பணிக்கு செல்பவராக இருந்தால் காலையில் இதையெல்லாம் தயார் செய்து கையில் கொண்டு சென்று விடுங்கள். உங்கள் மனதிற்குள் எல்லாவற்றையும் பிரார்த்தனை செய்துவிட்டு, பணியிடத்திற்கு அருகில் உள்ள பசு மாட்டிற்கு வழங்கலாம். 

மூன்றாவது செவ்வாய் ஹோரை! 

மூன்றாம் செவ்வாய் ஹோரை, செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6:00 மணிக்கு மேல் வரும். அப்போது உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு நெய் தீபத்தை ஏற்றுங்கள். நீங்கள் வழக்கமாக ஏற்றும் தீபத்தினை தவிரவும் மற்றொரு அகல் விளக்கில் நெய் தீபம் கட்டாயம் ஏற்ற வேண்டும். இது முருகனுக்காக ஏற்றும் தீபமாகும். இந்த தீபத்திற்கு முன்பாக நின்று, ''கடன் அடைபடும் வழியை காட்டு அப்பனே முருகா! கடனே இல்லாமல் வாழும் வாழ்வை தந்தருள் இறைவா!" என முருகப்பெருமானிடம் மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். இந்த பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் உங்களுடைய கடன் விரைவில் அடைபடும். 

இதையும் படிங்க: அடிக்கடி டீ குடிக்கிறீங்களா? அந்த நேரத்துல இந்த 5 உணவுகளை எடுத்துக்காதீங்க! உடம்பு தாங்காது!!

Latest Videos

click me!