வீட்டில் வாஸ்து பிரச்சனைகள் இருந்தால் பல பிரச்சனைகளை ஏற்படும். அதை செய்தால் மட்டுமே தொட்டது துலங்கும். சிலருக்கு வழக்கு தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். சிலருக்கு கடன் பிரச்சனைகள் இருக்கும். அதற்கு காரணம் கூட வீட்டு வாஸ்து பிரச்சனைகள் தான். உங்கள் வீட்டை வாஸ்துவின்படி சமநிலைப்படுத்தினால், எந்தவொரு சட்டப் பிரச்சினைகளையும், கடன் பிரச்சனைகளையும் நீங்கள் சந்திக்கவே வேண்டாம்.
கடன் சுமை குறையவே இல்லையா? வீட்டின் தெற்கு பகுதியினை மேடு மாதிரி உயரமாக மாற்றினால் நல்ல பலன் கிடைக்கும். தெற்கு பகுதியில் உள்ள சுற்றுச் சுவருடைய உயரத்தை அதிகமாக்கினாலும் கூட நல்லது. இதனால் தெற்கு திசையில் கட்டியெழுப்பப்படும் அறைகள் வடக்கு திசையை காட்டிலும் உயர்ந்துவிடும். அதுவே நல்லது.
வீட்டின் தெற்கு திசையில் கொஞ்சம் இடம் விட்டால் போதும். வடக்கு பகுதியை பொறுத்தவரை கூடுதல் இடத்தை விட்டு வீட்டை கட்டி கொள்ள வேண்டும். இப்படி செய்தால் நிதி பெருகும். தென் மேற்கு திசையில் நீங்கள் தண்ணீர் தொட்டி வைத்தாலும் கடன் சுமை அதிகமாகும். அதை தவிருங்கள். வீட்டின் வடக்கு திசையில் குப்பை, பழைய பொருள்கள், கல், செங்கல் ஆகியவை வைத்தால் பொருளாதார நெருக்கடி உண்டாகும். கடன் பெருகும். அதனால் அப்படி செய்ய வேண்டாம்.
இதையும் படிங்க; வீட்டில் அதிர்ஷ்டம் பெருக! மூங்கில் செடியை இந்த திசையில் வையுங்கள்!! பணமழை விடாமல் கொட்டும்!!
நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொண்டாலும், உங்களுடைய வழக்குகள் விரைவான தீர்வை பெறவும், அதுவும் உங்களுக்கு சாதகமான முடிவை பெறவும் வீட்டில் சில மாற்றங்கள் தேவை. உங்கள் வீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் உங்களை சட்டச் சிக்கல்களில் மூழ்கடிக்கலாம். எந்த விஷயங்களை கவனிக்க வேண்டும் தெரியுமா?