சந்தனம் மதச் சடங்குகள், சரும பராமரிப்பு போன்ற பல விஷயங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஜோதிடத்தில், சந்தனம் வெற்றி, செல்வம், புகழைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. குளிக்கும் நீரில் சந்தன எண்ணெய் அல்லது சந்தனப் பொடியைச் சேர்ப்பது மனதிற்கு அமைதி தரும். மன அழுத்தத்தைக் குறைத்து, நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும். நம் உடலுக்கு குளிர்ச்சியும் தரும்.