Today Rasipalan 20th Mar 2023: ஸ்பெஷலான நபருடனான சந்திப்பு.. உங்கள் வாழ்க்கையையே மாற்றப்போகுது

Published : Mar 20, 2023, 05:30 AM IST

மார்ச் 20ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

PREV
112
Today Rasipalan 20th Mar 2023: ஸ்பெஷலான நபருடனான சந்திப்பு.. உங்கள் வாழ்க்கையையே மாற்றப்போகுது

மேஷம்:

முக்கியமான வேலை இன்று முடியும். ஸ்பெஷலான தகவல் வந்து சேரும். அதன்மூலம் வருவாய் அதிகரிக்கும். மார்க்கெட்டிங்கில் நேரம் செலவழிப்பீர்கள். அரசு ஊழியர் பிரச்னைக்கு ஆளாகலாம்; கவனமாக இருக்கவும்.

212

ரிஷபம்:

ஆன்மீக ஈடுபாடு மன அமைதியளிக்கும். எதிர்மறை நபர்களிடமிருந்து விலகி இருக்கவும். புத்தகங்களை வாசியுங்கள். பெற்றொருடனான பிரச்னைகளை அமைதியாகவும் நிதானமாகவும் தீர்க்கவும். அவசரமோ கோபமோ வேண்டாம். 
 

312

மிதுனம்:

புதிய விஷயங்களை உங்கள் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்துவது வியப்பளிக்கும் விதமான மாற்றங்களை ஏற்படுத்தும். அமைதியாக வேலையை பார்த்தால் வெற்றி உங்களுக்குத்தான். தெரியாத நபர்களை நம்பவேண்டாம். அரசு ஊழியர்களுக்கு உயரதிகாரிகளுடன் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும்.
 

412

கடகம்:

கடினமான சூழலை நண்பர் அல்லது உறவினரின் உதவியால் மிக துணிச்சலாக எதிர்கொள்வீர்கள். ஃபோன் அல்லது ஈமெயிலில் நற்செய்தி வரும். வரவு அதிகரிக்கும்; அதற்கேற்ப செலவும் அதிகரிக்கும். டிராஃபிக் விதியை மீறுவது பிரச்னையை ஏற்படுத்தும். பணிச்சுமை அதிகரிக்கும்.
 

512

சிம்மம்:

ஸ்பெஷலான நபருடனான சந்திப்பு ஆதாயம் தரும். அந்த நபரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றி நடக்கவும். இளைஞர்கள் முக்கியமான முடிவை எடுக்க துணிவார்கள். முதலீடு செய்யும் முன் அதுதொடர்பான முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள். தொழில் விரிவாக்கம் குறித்து திட்டமிடுவீர்கள்.
 

612

கன்னி:

உங்களுக்கு சாதகமான நேரம் இது. நற்செய்தி வந்துசேரும். கடினமாக உழைக்க வேண்டிய நேரம். அரசு ஊழியர்களுக்கு முக்கியமான பொறுப்பு கிடைக்கும். யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யவும். 

712

துலாம்:

பிரச்னையிலிருந்து வெளிவந்து நிம்மதி அடைவீர்கள். மற்ற வேலைகளில் முழுக்கவனத்தையும் செலுத்துவீர்கள். கோபம் மற்றும் ஈகோவை தவிர்க்கவும். மாணவர்கள் கடும் போட்டியை சந்திப்பார்கள். தொழிலில் கடின உழைப்புக்கேற்ற முடிவு கிடைக்கும். ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். நண்பருடனான திடீர் சந்திப்பு உற்சாகமளிக்கும்.
 

812

விருச்சிகம்:

தனிப்பட்ட வேலைகள் சரியான நேரத்தில் முடியும். புதிய தொடர்புகள் உருவாகும். கடினமான சூழல்களில் பொறுமையை இழந்துவிடாதீர்கள். தொழிலில் சூழலுக்கும் காலத்திற்கும் ஏற்ற மாற்றங்களை செய்யுங்கள். அலுவல் ரீதியான பயணம் ஆதாயம் அளிக்கும். 

912

தனுசு:

மன அமைதி நிலவும். பொருளாதார செயல்பாடுகள் மந்தமாக இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் - மனைவி இடையேயான அன்யோன்யம் அதிகரிக்கும்.
 

1012

மகரம்:

ஆன்மீக ஈடுபாடும் செயல்பாடும் அதிகரிக்கும். சொத்து ரீதியான முதலீடு செய்வதற்கு முன் நன்கு விசாரித்துக்கொள்ளவும். பணி மாற்றம் செய்ய விரும்புபவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை ஆழமாக சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
 

1112

கும்பம்:

குடும்பத்தினரின் உதவியுடன் முக்கியமான வேலையை செய்து முடிப்பீர்கள். அதன்மூலம் சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். தொழில் ரீதியான பண பரிமாற்றத்தில் கவனம் தேவை. கணவன் - மனைவி இடையேயான உறவு இனிமையாக இருக்கும்.
 

1212

மீனம்:

மனதை பாசிட்டிவாகவும் பேலன்ஸாகவும் வைத்துக்கொள்வதன் மூலம் பிரச்னைகளை தீர்க்கலாம். உங்கள் முடிவுக்கே முக்கியத்துவம் கொடுத்து செயல்படுங்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களை கேட்டு முடிவெடுக்க வேண்டாம். பட்ஜெட்டில் கவனம் செலுத்தவும். 
 

Read more Photos on
click me!

Recommended Stories