பங்குனி உத்திரம் 2023 எப்போது? விரத முறை.. வழிபாடு பலன்கள் முழுதகவல்கள்.!

First Published Mar 18, 2023, 11:14 AM IST

Panguni uthiram 2023: பங்குனி உத்திர திருநாளில் முருகனுக்கு விரதமிருந்து வழிபட்டால் வீட்டுக்கு சுபிட்சம் வரும். கடன் நீங்கி தனம் பெருகும். 

பங்குனி உத்திரம் என்றால் நம் நினைவுகளில் முருகப்பெருமானுக்கு தான் முதலிடம் இருக்கும். ஏனெனில் அன்றைய தினம் முருகப்பெருமானுக்குரிய விரத நாள். தமிழ் மாதத்தில் பன்னிரண்டாவது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் பன்னிரெண்டாவதாக உள்ள உத்திரமும் இணையும் நாள்தான் பங்குனி உத்திரம். எல்லா மாதங்களிலும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாத உத்திர நட்சத்திரத்திற்கு தனி சிறப்புகள் உண்டு. இந்த நாளில் தான் முருகபெருமானுக்கு பக்தர்கள் தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்வார்கள். 

பெளர்ணமி விரத சிறப்பு 

வைகாசியில் வரும் பெளர்ணமி தினத்தை விசாகம் எனவும், தை மாதத்தில் வரும் பெளர்ணமி தைப்பூசம் எனவும் சொல்வது போலவே பங்குனியில் வரும் பெளர்ணமி பங்குனி உத்திரம் என சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதம் வரும் பெளர்ணமி நாளும் விரத நாள் தான். அப்போது விரதமிருந்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். குறிப்பாக தை, வைகாசி, பங்குனி ஆகிய மாதங்களில் வரும் பெளர்ணமி முருகனுக்கு உகந்த விரத நாட்களாகும். 

பங்குனி உத்திரம் 2023 | எப்போது?

இந்த ஆண்டு பங்குனி உத்திரம் அடுத்த மாதம் ஏப்ரல் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உத்திர நட்சத்திரத்தை பொறுத்தவரை ஏப்ரல் 4ஆம் தேதி காலை 10.29 மணி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி பிற்பகல் 12.09 மணி வரை இருக்கிறது. முந்தைய நாளே உத்திரம் நட்சத்திரம் தொடங்கினாலும் பெளர்ணமியும், உத்திர நட்சரத்திரமும் சேரும் தினம் தான் பங்குனி உத்திரம் என கருதப்படுவதால் ஏப்ரல் 05ஆம் தான் பங்குனி உத்திரமாக ஆன்றோர்களால் கணிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பெளர்ணமி திதி காலை 10.17 மணிக்கும் தொடங்கி ஏப்ரல் 06ஆம் தேதி காலை 10.58 மணி வரைக்கும் இருக்கும். 

பங்குனி உத்திரம் புராணக்கதை 

சிவனுடைய மோன நிலையை கலைத்து விட்ட மன்மதன் எரிக்கப்பட்டார். அப்போது தேவர்கள் கலங்கி நின்றனர். அவர்களுக்கு ஆறுதலாக தேவியை இந்த நாளில் தான் சிவன் மணந்து கொண்டார் என்பது புராணம். பங்குனி உத்திர தினத்தில் தான் சிவனுக்கும் பார்வதிக்கும் அலங்காரம் செய்து, மந்திரங்கள் ஒலிக்க திருமணம் நடத்தி, பல்லக்கில் ஊர்வலமாக பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்களாம். இப்படி சிவன் தேவி மண நாள் பங்குனி உத்திரம் என புராணங்கள் சொல்லுகின்றன. 

இதையும் படிங்க: eating rules: தினமும் சம்மணம் போட்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

இதே நாளில் தான் முருகன்- தெய்வானைக்கும், ராமன் - சீதைக்கும் ரங்கமன்னார் - ஆண்டாளுக்கும் திருமணங்கள் நடந்துள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. தெய்வங்களின் திருமணங்கள் நடந்த அற்புதமான நாள் பங்குனி உத்திரம். 

பங்குனி வழிபாடு பலன்கள் 

பங்குனி உத்திர நாளில் வழிபாடு செய்தால், கடன் தொல்லை நீங்கும். உங்கள் வீட்டில் சுபிட்சம் வரும். தனம் (செல்வம்) தானியம் வீட்டில் பெருகிவிடும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் சுமுகமாக முடியும் என ஆச்சார்யப் பெருமக்கள் கூறுகின்றனர். 

இதையும் படிங்க: எப்போதும் வீட்டில் பணம் பெருகணுமா? இந்த 4 பொருள் ஒன்றாக இருக்கணும்.. அவ்வளவுதான் பண ராசி வந்திடும்..!

click me!