எப்போதும் வீட்டில் பணம் பெருகணுமா? இந்த 4 பொருள் ஒன்றாக இருக்கணும்.. அவ்வளவுதான் பண ராசி வந்திடும்..!

First Published | Mar 18, 2023, 10:01 AM IST

வீட்டில் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் சில பொருள்களுக்கு உண்டு. வாஸ்து சாஸ்திரம் கூட அதை தான் வலியுறுத்துகிறது. 

பணம் வரவு வற்றாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் கூடவே கொஞ்சம் புத்திசாலித்தனம் இல்லையென்றால் வந்த பணமும் கைவிட்டு போய்விடும். யாருக்கு கொடுக்கிறோம்? என்ன செலவு செய்கிறோம் என்பதில் கவனம் வேண்டும். வாங்கும் சம்பளத்தில் முதல் செலவு "சேமிப்பு" என்ற பழக்கத்தை கடைபிடியுங்கள். நாம் வியர்வை சிந்தி உழைக்கும் பணம் முறையாக செலவழிந்து பணம் நம்மிடம் தங்க சில பொருள்களை வீட்டில் வைக்கலாம். உங்களுக்கு பண ராசி வந்துவிடும். 

வினை தீர்க்கும் விநாயகர் சிலையை வாங்கி வீட்டில் வையுங்கள். எப்போதும் நம் கட்டை விரல் அளவில் இருக்கும் விக்கிரகங்களை தான் வாங்கி வைக்க வேண்டும். பண வரவிற்காக வாங்கும் விநாயகர் விக்கிரகம் பித்தளை,செம்பு, வெள்ளி இதில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த சிலையை வாங்கி பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். பண வரவு உண்டு. 

Tap to resize

ஆமை நம் வீட்டுக்கு வந்தால் செல்வம் பெரும். ஒரு தட்டில் ஆமை நம் வீட்டிற்குள் வருவது மாதிரி வைக்க வேண்டும். எப்போதும் ஆமை நம் வீட்டை விட்டு வெளியில் செல்வது போல வைத்தல் கூடாது. வரவேற்பறையில் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும். 

ஒன்றை ஒன்று பார்த்து கொண்டிருக்கும் 2 யானைகள் பொம்மைகளை வாங்கி வீட்டில் வைக்க வேண்டும். மறந்தும் ஒரே ஒரு யானையை வாங்கி வராதீர்கள். இந்த யானை பொம்மைகளை பூஜை அறையில் வைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. வீட்டு வரவேற்பறையில் கூட வைத்துவிடலாம். வீட்டு வாஸ்து, கண் திருஷ்டி ஆகியவை கூட இந்த பொம்மைகளால் நிவர்த்தியாகும் என்பார்கள். 

பசுமாடும், கன்றும் இணைந்து இருக்கும் காமதேனு சிலையை வீட்டில் வைக்க வேண்டும். இதனை பூஜை அறை அல்லது வரவேற்பறையில் வைக்கலாம். உங்களுக்கு தெரியும் தானே.. முப்பது முக்கோடி தேவர்கள் தொடங்கி எல்லா தெய்வங்களும் கோமாதாவில் வாசம் செய்கிறார்கள். கோமாதா கன்றுடன் இருக்கும் சிலையை வீட்டில் வைப்பது ரொம்ப விசேஷம் வாய்ந்தது. 

இதையும் படிங்க: luck: காலையில் எழுந்ததும் இந்த பொருள்களை பார்த்தால் அதிர்ஷ்டம்... உங்க பாக்கெட்ல பணம் நிரம்பி கொண்டே இருக்கும்

உங்களுக்கு தெரியுமா? தினமும் காலையில் படுக்கையை விட்டு எழுந்த உடனே யார் முகத்தையும் காணாமல் தண்ணீர் 2 மடக்கு குடித்தால் உங்களுக்கு லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்குமாம். அன்றைய தினம் கோபமே வராதாம். 

இதையும் படிங்க: வீட்டில் இறந்தவர்களின் படத்தை இந்த இடத்தில் மாட்டுவது ரொம்ப தப்பு.. எந்த திசையில் வைத்தால் நன்மை பெருகும்?

Latest Videos

click me!