ஒரு நாளின் தொடக்கம் சிறப்பாக இருந்தால் அந்த நாள் முழுக்கவும் நன்றாக இருக்கும் என்பார்கள். அதனால் தான் நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும், 'யார் முகத்துல முழிச்சனோ தெரியலயே' என சொல்வார்கள். அதனால் சிலர் காலையில் குறிப்பிட்ட விஷயங்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். சாஸ்திரங்கள் நாம் காலையில் எதை பார்த்து கண் விழிக்க வேண்டும் என சொல்லியிருக்கிறது. அதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
காலையில் படுக்கையை விட்டு எழுந்த உடனே முதலில் உங்களுடைய உள்ளங்கையை பார்க்க வேண்டும். இப்படி உள்ளங்கையை பார்த்து கண் விழித்தால் மகாலட்சுமி அருள் உங்களுக்கு கிடைக்கும். ஏனென்றால் நம்முடைய உள்ளங்கையில் மகாலட்சுமி வசிப்பதாக ஒரு முன்னோர் நம்பிக்கை உண்டு. தினமும் காலையில் உள்ளங்கையை பார்த்துவிட்டு அதை கண்களில் ஒத்தி எடுத்தபின் நாளை தொடங்கி பாருங்கள். அந்த நாளில் உங்களுக்கு பணவரவு இருக்கும்; செலவுகள் குறையும்.
எல்லா பொருளுக்கும் நேர்மறை/ எதிர்மறை ஆற்றல் உண்டு. அந்த வகையில் வீட்டில் முட்செடிகள் வைத்திருந்தால் காலையில் அதை பார்த்து உங்கள் நாளை தொடங்காதீர்கள். ஏனெனில் அந்த செடிகளை காலையில் காணும் போது உங்களுக்கு பல தொந்தரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
புத்தர் சிரிக்கும் சிலை உங்கள் நாளை அதிர்ஷ்டமாக மாற்றிவிடும். மகிழ்ச்சி பெருகும். ஒவ்வொரு நாள் காலையில் கண்விழிக்கும் போதும் பணத்தை பார்த்து நாளை தொடங்கினால் அந்த நாள் சுபிட்சமாக இருக்கும். அதாவது இப்படி செல்வங்களையும் பணத்தையும் பார்ப்பது வராத கடனையும் வாங்கி தரும். வீட்டில் தங்கம் பணம் எல்லாம் வெளிப்படையாக போட்டு வைக்க முடியாது. ஆகவே தங்க குவியல், பொற்பானை, பணம் மாதிரியான படங்களை வீட்டில் ஒட்டி வைத்து காலையில் அதை காணலாம். இந்த மாதிரியான படங்களை காணும் போது அந்த நாள் முழுக்க நன்றாக இருக்குமாம்.
ஜோதிடசாஸ்திரத்தின்படி, காலையில் பால், தயிர் ஆகியவற்றை தரிசிப்பது மங்களகரமானது. இது உங்கள் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. காலையில் யாராவது துடைப்பம் வைத்து சுத்தம் செய்வதைக் கண்டால், அது ரொம்ப நல்ல அறிகுறியாகக் கருதப்படுகிறது. நீங்கள் ஏதாவது பிரச்சனையில் மாட்டியிருந்தால் விடுபட போகிறீர்கள் என அர்த்தம். காலையில் எழுந்தவுடன் பசுவைப் பார்த்தாலோ அல்லது அதன் குரலைக் கேட்டாலோ, அந்த நாள் மிகவும் மங்களகரமானதாக இருக்கும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
இதையும் படிங்க: வீட்டில் இறந்தவர்களின் படத்தை இந்த இடத்தில் மாட்டுவது ரொம்ப தப்பு.. எந்த திசையில் வைத்தால் நன்மை பெருகும்?