வீட்டில் இறந்தவர்களின் படத்தை இந்த இடத்தில் மாட்டுவது ரொம்ப தப்பு.. எந்த திசையில் வைத்தால் நன்மை பெருகும்?

First Published Mar 17, 2023, 10:06 AM IST

வீட்டில் இறந்தவர்களின் புகைப்படங்களை எந்த திசையில் வைத்து வழிபட்டால் நன்மைகள் பெருகும் என்பதை இங்கு காணலாம். 

வீட்டில் நன்மைகள் பெருக முன்னோர் ஆசியும் வேண்டும் என்பார்கள். அதனால் தான் பித்ருக்களை அமாவாசை திதி நாள்களில் வழிபாடு செய்வார்கள். ஆனால் வீட்டில் இறந்தவர்களின் புகைப்படங்களை எங்கு எப்படி வைத்து வழிபட வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். வீட்டில் எந்த இடத்தில் இறந்தவர்களின் புகைப்படத்தை வைத்து வழிபட்டால் வீட்டிற்கு நல்லது என்பதை காணலாம். 

இறந்தவர்களின் புகைப்படங்களை வீட்டு பூஜை அறையில் மாட்டி வைத்தால் என்னாகும் தெரியுமா? வீட்டிற்கு அது நல்லதல்ல. பூஜை அறையில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைக்கக் கூடாது. நாம் இறந்தவர்களை கடவுளாக நினைத்து வழிபாடு செய்தாலும் கூட அவர்களும் மனிதர்கள் தான். வாழும்போது பாவங்கள் செய்திருப்பார்கள். ஆகவே கடவுள் படத்திற்கு இணையாக அவர்களின் படத்தை பூஜையறையில் வைப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று சாஸ்திர நியதிகள் தெரிவிக்கின்றன. 

அப்படியானால் வீட்டில் எந்த இடத்தில் வைக்கலாம் என கேட்கிறீர்களா? பூஜை அறை, படுக்கை அறை ஆகிய இருஇடங்களையும் தவிர்த்து பிற இடங்களில் முன்னோரின் படங்களை வைத்து வழிபடுவது பாதிப்பை ஏற்படுத்தாது. அதுமட்டுமில்லாமல், இறந்து போனவர் பார்வை தெற்கு திசை நோக்கி பார்க்கும் படி படத்தை மாட்டி வைத்தால் போதும். இதுதான் குடும்பத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் திசையாகும். 

முன்னோருக்கு பூஜை அறை விளக்கு வைக்கலாமா? என்பது எல்லோருக்கும் வரும் கேள்விதான். பூஜை அறை விளக்கு இல்லாமல் முன்னோருக்கு தனிவிளக்கு தான் வாங்கி பயன்படுத்த வேண்டும். பூஜை அறை விளக்கை பயன்படுத்த கூடாது.

வீட்டின் வடக்கு, தென்மேற்கு மூலையில் இறந்தவர்களின் படத்தை வைக்கவே கூடாது. இதனால் வீட்டில் அமைதியில்லாமல் போகும். கணவன்- மனைவி சண்டை, விவாகரத்து வரைக்கும் கூட போகலாம். 

இதையும் படிங்க: சனி பலன்கள்.. இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் வந்தாச்சு.. இனி வர்ற அதிர்ஷ்டத்தால் வாழ்க்கையே மாறப் போகுது..!

நல்லெண்ணெய், நெய் ஆகிய எண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம். இதில் விதிவிலக்கு இல்லை. அனைத்து எண்ணெய் கலந்து ஊற்றி கூட விளக்கு ஏற்றலாம். பூஜைக்கு ஊற்றும் எண்ணெய் பயன்படுத்தலாம்.. விளக்கு தான் தனிவிளக்கு. அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, வெள்ளி விளக்கு போன்ற எந்த விளக்கையும் வாங்கி உபயோகிக்கலாம். 

நாள்தோறும் முன்னோர் வழிபாடு செய்ய வேண்டுமா என்ற குழப்பம் இருந்தால், இனி குழம்பவே வேண்டாம். தினமும் தீப, தூப, ஆராதனையை செய்து, பூ போட்டு வழிபாடு மேற்கொள்ளவேண்டும். நாள்தோறும் காலை பூஜை அறையில் தீபம் ஏற்றும்போது முன்னோர் படத்திற்கு முன்பும் விளக்கேற்றுங்கள். சுவாமி திருவுருவ படங்களுக்கு ஊதுபத்தியை காட்டிய பின் முன்னோர் படங்களுக்கு காட்டலாம். அதைப் போலவே நைவேத்தியமாக சுவாமிக்கு படைக்கும் உணவில் கொஞ்சம் முன்னோர் படங்களுக்கும் வைத்து வழிபடுங்கள். நாள்தோறும் பூ போட்டு வழிபட முடியா விட்டால் விளக்கு மட்டும் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். 

இதையும் படிங்க: வெறும் 5 ரூபாய்க்கு நுங்கு சுளை 1 வாங்கி சாப்பிட்டால்.. உடலில் இவ்வளவு பிரச்சனைகளை சரி செய்துவிடும் தெரியுமா?

click me!