மேஷம்:
இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்களது கடின உழைப்பிற்கு விரைவில் பலன் கிடைக்கும். கவலை, பதற்றம் ஆகியவை நீங்கி மன அமைதி நிலவும். ஈகோ, அடம், கோபம் ஆகியவற்றை தவிர்க்கவும். படித்துப்பார்க்காமல் எதிலும் கையெழுத்திட வேண்டாம்.
ரிஷபம்:
கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். உங்கள் மீதான பொறாமையால் சிலர் உங்களை பற்றி புறம்பேசுவார்கள். நற்செய்தியால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கடகம்:
அனுபவஸ்தர்களிடம் அறிவுரை கேட்க தயங்காதீர்கள். முதலீடு செய்ய ஏற்ற தினம். எதிர்மறையான நபர்களிடமிருந்து விலகி இருங்கள். பணிச்சுமை அதிகரிக்கும். அமைதி, பொறுமை, நிதானம் அவசியம். அவசரமோ கோபமே பட வேண்டாம். கணவன் - மனைவி இடையே நல்லுறவு இருக்கும்.
சிம்மம்:
சமூக வேலைகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மூத்தவர்களின் ஆதரவால் உங்கள் மதிப்பு உயரும். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள். பிரச்னைகளை கோபப்படாமல் தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
கன்னி:
அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கோபப்படாமல் பிரச்னைக்கு சுமூகமாக தீர்வு காணுங்கள். தொழில் விஷயங்களை கண்காணிக்கவும்.
துலாம்:
குழந்தைகளின் பிரச்னைகளை தீர்த்து வைப்பீர்கள். கூட்டுத்தொழில் தொடர்பாக யோசித்துக்கொண்டிருந்தால் உடனே உறுதி செய்து செயல்படுத்துங்கள். வேலையில் ஏற்படும் மாற்றத்தால் ஆதாயம் கிடைக்கும். குடும்ப விவகாரங்களில் வெளிநபர்களை தலையிட அனுமதிக்க வேண்டாம். விபத்து, காயம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. அதனால் அதிக கவனம் தேவை.
விருச்சிகம்:
திட்டம் தீட்டினால் மட்டும் போதாது; அதை முறையாக செயல்படுத்தவும் வேண்டும். இதை மனதில் வைத்து செயல்படவும். தொழிலை மார்க்கெட்டிங் செய்ய ஏற்ற தினம். முதலீடு செய்வதில் கவனம் தேவை.
தனுசு:
ஐடியாக்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளை கட்டுப்படுத்தாமல் கொஞ்சம் சுதந்திரமாக விடவும். தொழில் முன்னேற்றத்திற்கு ஸ்பெஷலான நபர் ஒருவர் உதவுவார். வெளிநபரின் அறிவுரை பாதிப்பை ஏற்படுத்தும். கணவன் - மனைவி இடையே இனிமையான உறவு இருக்கும்.
கும்பம்:
மிகவும் பரபரப்பாக நீங்கள் இயங்க வேண்டியிருக்கும். அதனால் உங்களது தனிப்பட்ட வேலையைக்கூட செய்து முடிக்கமுடியாது. முக்கியமான மீட்டிங் எதுவும் இருந்தால் ஒத்திவையுங்கள். பெற்றோர்கள் உடல்நிலையில் அக்கறை காட்டவும். குடும்பத்தில் வெளியாட்களின் தலையீட்டை தவிர்க்கவும்.
மீனம்:
தனிப்பட்ட மற்றும் குடும்ப வேலைகளில் அதிக நேரம் செலவிடுவீர்கள். குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள். வரவு குறையும்; செலவு அதிகரிக்கும். மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்