Ambani Family Drink Milk: அம்பானி குடும்பம் குடிக்கிற பால்கூட அரியவகை தானாம்! ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா?

First Published | Jun 12, 2024, 6:02 PM IST

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும், இந்திய பணக்காரர்களில் டாப் 5 லிஸ்டில் இருக்கும் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பருகும் அரியவகை மாட்டின் பசும் பால் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
 

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் எடுத்துக் கொள்ளும் திரவ உணவுகளில் ஒன்று பால். பொதுவாக பலரும் காலையில் எழுந்ததும், முதலில் அருந்துவது பாலை கொண்டு தயாரிக்கப்படும் காபி, டீ, போன்ற புத்துணர்ச்சி பானங்களை தான்.
 

பாலை கொண்டு தயாரிக்கப்படும் தயிர், வெண்ணெய், நெய் போன்ற பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது மனிதர்களின் தசை, எலும்பு, பற்கள், தோல், போன்றவற்றிக்கு மிகவும் நல்லது. கண் பார்வை பிரச்சனைகளும் தவிர்க்கப்படும். காரணம் பாலில் கால்சியம், விட்டமின், புரதம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

பிரேம்ஜி மீது அப்படி என்ன வெறுப்பு! திருமணத்திற்கு யுவன் குடும்பம் வராததன் பின்னணி இதுவா? பிரபலம் கூறிய தகவல்!
 

Tap to resize

தினமும் சாதாரண மனிதர்கள் அருந்தும் பசும்பாலை விட, அம்பானி குடும்பத்தினர் அருந்தும் பசும்பால் மிகவும் ஸ்பெஷல் என்கிற தகவல்தான் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
 

ஹோல்ஸ்டீன்-ஃப்ரீசியன் (Holstein-Friesian breed) எனப்படும் அரியவகை மாட்டின் பாலை தான் அம்பானி குடும்பத்தினர் அருந்துகிறார்களாம். நெதர்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட இந்த வகை மாடுகள், கருப்பு மற்றும் வெள்ளை நிற புள்ளிகளுடனும், சிவப்பு மற்றும் வெள்ளை நிற புள்ளிகளுடனும் காணப்படுகின்றன.

Aishwarya Arjun Wedding Saree: அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமண புடவையில் இப்படி ஒரு சிறப்பா? ஆச்சர்ய தகவல்!
 

இவை மிகவும் ஆரோக்கியமான மாடுகளாக பார்க்கப்படுகிறது. இவ்வகை மாடுகள் ஒரு நாளைக்கு 25 லிட்டர் வரை பால் கறக்கும் என கூறப்படுகிறது. மேலும் முகேஷ் அம்பானி குடும்பத்திற்காக பூனேவில் இருந்து பிரத்தேகயகமாக இந்த அரியவகை மாட்டின் பால் வர வைக்கப்படுகிறதாம்.

பூனேவில் உள்ள பண்ணையில் இவ்வகை பசுமாடுகள் சுமார் 3,000-திற்கும் மேல் வளர்க்கப்பட்டு வருவதாகவும், 35 ஏக்கர் பரப்பளவில் இந்த மாடுகள் மிகவும் தூய்மையாக வளர்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றன. அதேபோல் இந்த மாடுகள் குடிக்க சுத்திகரிக்கப்பட்ட RO தண்ணீர் தான் கொடுக்கப்படுகிறதாம். 

Shalini Ajith Photos: அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஷாலினி!
 

அம்பானி குடும்பத்திற்கு மட்டுமின்றி, மும்பையில் உள்ள பல பாலிவுட் பிரபலங்கள் இவ்வகை மாட்டின் பசும்பாலை தான் விரும்பி குடிக்கிறார்களாம். சாதாரண பசு மாடுகளில் இருந்து கிடைக்கும் பால் ஒரு லிட்டர் 45 முதல் 50 ரூபாய் வரை சந்தையில் விற்கப்படும் நிலையில்,  இந்த மாடுகளின் பால் ஒரு லிட்டர் 152 ரூபாய் என கூறப்படுகிறது.

Latest Videos

click me!