கோடை காலத்தில் ஏசியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடு முதல் வேலை செய்யும் இடம் வரை பெரும்பாலான நேரம் ஏசியில்தான் கழிகிறது. இருப்பினும் ஆஸ்துமா நோயாளிகள் கொஞ்சம் கவனமாக தான் இருக்க வேண்டும். ஏனெனில், ஏசியில் இருந்து வருண் காற்று அவர்களுக்கு ஆபத்தானது.
எப்படியெனில், ஏசி ஆன் செய்யும் போது அருகில் இருக்கும் தூசி துகள்கள் இந்த காற்றின் மூலம் அவர்களது உடலுக்கு சென்றடைந்து பிரச்சனைகளை அதிகரிக்கும். மேலும், இந்தத் துகள்கள் சுவாசத்தின் மூலம் நுரையீரலுக்கு நுழைந்து மோசமான தாக்குதலையும் ஏற்படுத்தும்.
எனவே, ஆஸ்துமா நோயாளிகள் ஏசியில் உட்காரும் முன் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அவற்றை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ஆஸ்துமா நோயாளிகள் ஏசியில் உட்காரும் முன் அறை சுத்தமாக இருக்கிறதா.. இல்லையா என்பதை முதலில் கவனிக்கவும். ஏனென்றால், அறையில் தூசி இருந்தால் அது காற்றின் வழியாக நுரையீரலுக்கு சென்று அதை சேதப்படுத்தும். மேலும், இதனால் சுவாச பிரச்சனையும் ஏற்படும். எனவே, ஏசி இருக்கும் அறையை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஆஸ்துமா நோயாளிகள் ஏசியின் வெப்பநிலையை சுமார் 25 டிகிரியில் வைத்து இருப்பது நல்லது. அதுபோல நீங்கள் நீண்ட நேரம் ஏசியல் அமர்ந்திருந்தால் முகமூடி அணிந்து கொள்ளுங்கள். மேலும், இன்ஹேலரை உங்களுடன் வைத்துக் கொள்ளவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D