ஒவ்வொரு பெண்களும் தங்களது சரமும் ஆரோக்கியமாகவும் பல பலப்பாகவும் இருக்க விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் பல விதமான அழகு சாதன சரும பொருட்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவை சருமத்தை சேதப்படுத்தும்.
அழகு சாதன பொருட்கள் மட்டுமின்றி, சருமத்தில் பயன்படுத்தக்கூடாத சில பொருட்கள் (அ) விஷயங்களும் உள்ளன. எனவே, தோல் பராமரிப்பு பிரச்சனைகளை தடுக்க உங்கள் முகத்தில் ஒருபோதும் தடவக் கூடாதப் பொருட்கள் என்னென்ன என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பாடி லோஷங்கள்: நீங்கள் உங்கள் முகத்தில் பாடி லோஷன்களை பயன்படுத்துகிறீர்கள் என்ற நீங்கள் உடனே அதை நிறுத்துங்கள். பாடி லோஷங்கள் பொதுவாக கை, கால் தொடை மற்றும் முதுகில் போன்ற அடர்த்தியான தோலை ஹைபிரைட் செய்ய தான் பயன்படுத்துகின்றது. மேலும், இதில் கடினமான பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் இருப்பதால் முகத்தின் மென்மையான தோலை சேதப்படுத்தும்.
சூடானது நீர்: உங்கள் முகத்தை மிகவும் சூடான நீரில் கழுவினால் காயங்கள் ஏற்படுவது மட்டுமின்றி, உங்கள் சருமத்தில் இருக்கும் ம் இயற்கையான ஈரப்பதத்தை அவை அகற்றிவிடும். இது இயற்கையான எண்ணெய்களை அகற்றி, சருமத்தை வறண்டு போக செய்து முகப்பருக்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இது அரிக்கும் தோல் அலர்ஜி, காயங்கள் முகப்பருக்கள், ஹைப்பர் பிக்மென்டேஷன் போன்ற பிற சரும பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
டூத் பேஸ்ட்: டூத் பேஸ்ட் முகத்தின் தோலுக்கு தீங்கு விளைவிக்கும். பல பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் இதில் உள்ளதால், அவை அடைப்பட்ட துளிகளை ஏற்படுத்தும். மேலும் சருமத்தை எரிச்சலூட்டும். இதனால் வீக்கம் மற்றும் சிவத்தல் ஏற்படலாம். மேலும் அவை, அதிகப்படியான சரும வளர்ச்சி ஏற்படுத்துவது மட்டுமின்றி, முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பியையும் தூண்டும்.
இதையும் படிங்க: Beauty Tips : இனி பார்லர் போகாமலே உங்கள் முகத்தை ஆழமாக சுத்தம் செய்யலாம்.. டிப்ஸ் இதோ!
சமையல் எண்ணெய்கள்: தேங்காய் எண்ணெய் (அ) ஆலிவ் எண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களை உங்கள் முகத்தில் நேரடியாக பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவை சில வகையான தோல் அடைப்பு மற்றும் துளைகளுக்கு வழிவகுக்கும். மேலும், இந்த எண்ணெய்களில் ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்புகள் அதிகம் உள்ளன. இவை முகப்பரு மற்றும் பிறர் தோல் பிரச்சனைகளைத் தூண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D