நடிகர், கதாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் கிரேஸி மோகன். கிட்டத்தட்ட 30 நாடகங்கள், 50க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், மற்றும் 100 சிறுகதைகள் எழுதியுள்ள இவர், சினிமா மீதுள்ள ஆர்வத்தால் பொறியியல் படித்துவிட்டு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் படிப்படியாக தன்னுடைய திறமையால் முன்னுக்கு வந்து சினிமாத்துறையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியிருந்தார் கிரேஸி மோகன்.
24
crazy mohan, Kamalhaasan
கிரேஸி மோகன் மறைந்துவிட்டாலும் அவரின் படைப்புகள் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன. நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் என்பதால் கிரேஸி மோகன் படங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்று அடித்து சொல்லலாம். குறிப்பாக கமலுடன் ஏராளமான படங்களில் பணியாற்றினார் கிரேஸி மோகன். இவர்களது காம்போவில் வெளிவந்த காதலா காதலா, பஞ்ச தந்திரம் போன்ற படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
இப்படி திரையுலகில் தன்னுடைய பெயரை அழுத்தமாக பதிவு செய்துவிட்டு சென்றுள்ள கிரேஸி மோகனின் படங்களை கூர்ந்து கவனித்தால், அதில் மற்றுமொரு ஒற்றுமையும் இருக்கும். அதுதான் ஜானகி என்கிற பெயர். கிரேஸி மோகன் பணியாற்றும் படங்களில் ஹீரோயின் பெயர் பெரும்பாலும் ஜானகியாக தான் இருக்கும். அப்படி ஜானகி என்கிற பெயர் இல்லை என்றால் மைதிலி என்கிற பெயருடன் ஹீரோயின் கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்பார் கிரேஸி மோகன்.
44
Crazy mohan friend Kamalhaasan
இந்த ஜானகி என்கிற பெயருக்கு பின்னால் ஒரு சீக்ரெட் தகவலும் ஒளிந்திருக்கிறது. ஜானகி என்பது கிரேஸி மோகனின் ஸ்கூல் டீச்சர் பெயராம். அவர்மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக தான் எந்த ஒரு கதை எழுதினாலும் அதில் ஜானகி என்கிற பெயரை தான் ஹீரோயினுக்கு வைப்பாராம். நாடகத்திலும் இதே செண்டிமெண்டை பாலோ செய்து வந்திருக்கிறார் கிரேஸி மோகன். இதை பார்த்த நெட்டிசன்கள் இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே என வாயடைத்துப் போய் உள்ளனர்.