இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும்! எந்தெந்த தேதிகளில் தெரியுமா?

First Published | Dec 6, 2024, 4:43 PM IST

ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களுக்கு ஈடாக இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு  வெளியாகியுள்ளது.

cyclone fengal

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஃபெஞ்சல் புயல் உருவானது. இந்த புயல் காரணமாக கடந்த 30ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை வெளுத்து வாங்கியது.

Puducherry Floods

குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ., 20 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் 49 செ.மீ., மழை பதிவாகி  இருந்தது. காரைக்காலில் 16.9 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. 

இதையும் படிங்க: School College Holiday: ஜாக்பாட்! 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியானது அறிவிப்பு!

Tap to resize

School Holiday

இதனால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்ததும் மட்டுமல்லாமல் பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்தனர். அறுவடைக்கு தயாரான பயிர்களும் தண்ணீர் மூழ்கி நாசமானதால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த நவம்பர் 27, 28, 29 தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

Saturday Working Days

இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகளுக்காக விடப்பட்ட விடுமுறைகளை ஈடு செய்யும் விதமாக பள்ளிகள் சனிக்கிழமைகளில் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 27, 28, 29ம் தேதிகளில் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வைகயில் டிசம்பர் 7, 14, 21ம் தேதிகளில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  வீடு தேடி வரும் டோக்கன்! யாருக்கெல்லாம் 2000 ரூபாய்? எப்போது கிடைக்கும்? முழு விவரம்!

Half-Yearly Exams Postponement

இதனிடையே மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம்,  திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!