School College Holiday: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு!

Published : Nov 26, 2024, 05:35 PM ISTUpdated : Nov 26, 2024, 05:46 PM IST

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது நாளை புயலாக வலுப்பெற்று, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பரவலாக மழை பெய்யும்.

PREV
15
School College Holiday: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு!
Chennai Meteorological Department

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை 8.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை - திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 710 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. 

25
Tamilnadu Heavy Rain

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை புயலாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

35
Tamilnadu Rain

இதன் காரணமாக நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என தெரிவித்துள்ளது. 

45
Chennai Rain

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

55
School College Holiday

கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை புதன்கிழமை  புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories