Beast: ரிலீஸுக்கு முன்பே முன்பதிவில்...முக்கிய இடத்தில் வசூல் சாதனை செய்த பீஸ்ட்...குஷியில் விஜய் ரசிகர்கள்..!

Published : Apr 06, 2022, 06:27 PM IST
Beast: ரிலீஸுக்கு முன்பே முன்பதிவில்...முக்கிய இடத்தில் வசூல் சாதனை செய்த பீஸ்ட்...குஷியில் விஜய் ரசிகர்கள்..!

சுருக்கம்

Beast: படத்தின் புரமோஷன் மற்றும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

நெல்சன் இயக்கத்தில் விஜய்யின் 65-வது படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், படத்தின் புரமோஷன் மற்றும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.மேலும், படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. 

நெல்சன் மற்றும் விஜய் கூட்டணி:

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், ஷான் டாம் சாக்கோ , யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் நிறைந்த கமர்ஷியல் படமாக தயாராகி உள்ள இந்த படத்தில் நடிகர் விஜய் உளவுத்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.  மேலும், படத்திற்கு கூடுதல் பலமாக அனிருத் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இன்னும் 6 நாட்களில் படம் ரீலிஸ்:

அதன்படி பீஸ்ட் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி  40 மில்லியனுக்கு அதிகமாக பார்வைகளை குவித்து சாதனை படைத்தது. பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. 

மேலும், படத்தின் புரமோஷன் மற்றும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

முன்பதிவில் சாதனை:

அதன்படி தற்போது பீஸ்ட் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், அமெரிக்காவில் முன்பதிவில் $150,000 கடந்துள்ளதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை பீஸ்ட் திரைப்படத்தை வெளியிடும் நிறுவனமே இணையத்தில் பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க....Beast: விஜய்க்கு முன்னரே பீஸ்ட் படத்தை முதலில் பார்த்த நபர்...நெல்சன் கூறிய அந்த நபர் யார் தெரியுமா..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?