ஒரு சின்ன உதாரணம், கடந்த வாரம் 28 பேர் கொண்ட ஒரு நிர்வாக குழுவை தலைவர் அறிவித்தார், அந்த நிர்வாக குழு கூட்டத்தை அடுத்த நாள் மதுரைக்கு தேவர் ஜெயந்திக்காக போயிட்டு இருந்தோம். அப்ப நடுவுல தேனீருக்காக ஒரு இடத்தில் நிறுத்தினோம். ஒரு பெரியவர் என்கிட்ட வந்து கேட்டார் இப்பதான் நீங்க வந்து 28 பேர் கொண்ட கூட்டத்தை முடித்து இருக்கீங்க. என்ன முடிவு எடுத்தீங்கன்னு கேட்டார். மிகப்பெரிய ஒரு ஆச்சரியமாக இருந்தது. ஏன்னா இப்ப நிறைய பேரு பேசுறவங்க சொன்னாங்க அரசியல் வழிபடுத்தனும்னு. கிட்டத்தட்ட 80 இல்ல 90% 100 சதவீத தமிழக மக்களை நம்முடைய தலைவர் அரசியல் வழிபடுத்தி இருக்கிறார். ஒரு கூட்டம் நடந்து இரண்டு மணி நேரத்தில் அந்த கூட்டத்துல என்ன நடந்துச்சு என ஒருவர் என்னிடம் கேட்கிறார் என்றால் இந்த 15, 16 வருஷத்துல இதுதான் நான் பார்ப்பது முதல் முறை.
ஸ்டாலின் தினமும் கூட்டம் நடத்திட்டு இருக்கிறார். கோடிக்கணக்கான மக்கள் டிவில பாத்துருப்பாங்க. யாராவது ஒருத்தருக்கு என்ன கூட்டம் நடத்துனாங்கன்னு தெரியுமா? யாருக்கும் எதுக்கு கூட்டினாரு? என்ன கூட்டம் நடத்துறாங்கன்னு தெரியாது. ஏனென்றால் மொத்த மக்களும் இவர்கள் மீது எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் கூடினாலே ஒன்னு அவங்க குடும்பத்தை வளர்க்கிறதாக இருக்கும். இல்ல, இந்த நாட்டை கொள்ளை அடிக்கிறதா இருக்கும். அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த மக்கள் இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் ஒவ்வொரு நகர்வை பார்ப்பதற்கு காரணம் அவர்களுக்கு தலைவர் மீது முழு நம்பிக்கை. 2026வது நாம் காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்திருக்கிறது. இந்த தலைவருடைய சுற்றுப்பயணம் எல்லாம் ஒவ்வொரு நாளும் சிறப்பாக சென்று கொண்டிருந்தபோது தான் இந்த கரூர் பெருந்துயரம் நம்மையெல்லாம் கலங்க வைத்தது. திமுக மாதிரி ஒன்றரை லட்சம் பேர் 2009 இல் இலங்கையில் மறைந்தார்கள். அதிலிருந்து பல பேர் புதிதாக அரசியல் வந்தவர்கள், நான் உட்பட.