அவதூறு பரப்பும் திமுகவுக்கு கண்டனம்..! சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தவெக நிறைவேற்றும் தீர்மானங்கள்..!

Published : Nov 05, 2025, 10:11 AM IST

கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க முழு அதிகாரத்தை தலைவருக்கு வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்களை தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
13

தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் தலைவர் நடிகர் விஜய் தலைமையில், இன்று மாமல்லபுரம், ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெறுகிறது. இது கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள், தேர்தல் முன்னெடுப்புகள், கூட்டணி விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய விஷயங்களை விவாதிக்கப்பட உள்ளது. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். உறுப்பினர்கள் அழைப்புக் கடிதம் மற்றும் கட்சி அடையாள அட்டையுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

23

இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதன்படி தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் கரூர் இரங்கல், பெண்கள் பாதுகாப்பு, மீனவர்கள் கைது கண்டனம், SIR கண்டனம். டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் முறையாக மேற்கொள்ளாத விவசாய விரோத அரசுக்கு கண்டனம்.

33

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானம் கட்ட கூடாது. தொழில் முதலீடு வேலை வாய்ப்புகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மக்கள் சந்திப்பில் விஜய் மற்றும் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும். கட்சி மீதும், கட்சி நிர்வாகிகள் மீதும் அவதூறு பரப்பும் ஆளும் கட்சிக்கு கண்டனம். அடிப்படை பொது பிரச்சினைகளில் கருத்து தெரிவிக்கும் நபர்களை கைது செய்து கருத்துரிமையை நசுக்கும் அரசுக்கு கண்டனம். கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க முழு அதிகாரத்தை தலைவருக்கு வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்களை தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories