ஒரு உயிரோட வேல்யூ என்னவென்று விஜய்க்கு தெரியுமா? தெரியாதா? விழுந்தானே அவனை நீங்கள் பிடித்தீர்களா? கண்டுக்காம நடந்து வேடிக்கையா பார்த்து போய்க்கிட்டுதானே இருந்த... கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறான். அப்போது கூட அவனை விஜய் பார்த்தும் கண்டுக்கல. அவன் கம்பியை பிடித்து தொங்கவில்லை என்றால் அன்னைக்கு செத்து இருப்பான். நாங்க தான் பிள்ளையை இழந்து போய் இருக்கணும். இப்பவே உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால், மக்களுக்கு நீ எப்படி பாதுகாப்பு கொடுக்கப் போகிறாய்?
செய்கிறேன்... செய்கிறேன் என்று சொல்லக்கூடாது. ஆட்சிக்கு வரும் முன்பே ஒருத்தன் செய்யணும். மக்களிடம் சும்மா அவன் சொத்த... இவன் சொத்தனு அடுத்தவங்களை குறை சொல்லக்கூடாது. நம்ம செய்யணும். நம்ம மக்களுக்கு சரியாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும். உனக்காக வந்த ரெண்டு இளைஞர்கள் செத்து இருக்கிறார்கள். ஒருத்தன் மூச்சு திணறல் ஏற்பட்டு செத்திருக்கிறான். ஒருத்தன் கரண்ட் அடித்து செத்து இருக்கிறான். அவங்க உயிரை நீ என்ன பணம் கொடுத்தாலும், என்ன ஈடுகட்டினாலும் உயிரை நீ திரும்ப கொடுக்க முடியுமா? அவன் அப்பா, அம்மாவுக்கு இருக்கிற பாசத்தை நீ கொடுக்க முடியுமா?