இந்து விரோத மு.க.ஸ்டாலினை ஐயப்பன் கோயிலுக்கு அழைப்பதா..? ஓட்டுக்காக நாடகம்: ராஜீவ் சந்திரசேகர் கடும் எதிர்ப்பு..!

Published : Aug 23, 2025, 09:19 PM IST

ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தின் நம்பிக்கையையும் அவமதித்தவர்கள். ஹிந்துக்களையும் இந்து நம்பிக்கையையும் அவமதித்த பிறகு, இப்போது தேர்தலுக்காக ஐயப்பனைத் தேடி வந்துள்ளனர். இந்த செயல் அனைத்தும் ஓட்டு வங்கிக்காக மட்டுமே

PREV
14

‘பினராயின் கேரள அரசு உலக ஐயப்ப சங்கமத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைத்துள்ளது ஹிட்லர் யூத கொண்டாட்டத்தில் பங்கேற்பது போல’ என கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

உலக ஐயப்பன் சங்கமம் மாநாடு, கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. திருவாங்கூர் தேவஸ்தானமும், கேரள அரசும் இணைந்து நடத்ததும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கேரள அமைச்சர் வாசவன் அழைப்பு விடுத்தார். கேரள அரசின் இந்த செயலுக்கு பாஜ கடும் எதிர்ப்பையும், விமர்சனத்தையும் முன்வைத்துள்ளது.

24

திருச்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், ‘‘சனாதன தர்மத்தின் எதிர்ப்பாளரும், திமுக தலைவருமான தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், உலக ஐயப்ப சங்கம மாநாட்டில் பங்கேற்பது இந்துக்களை அவமதிப்பதற்குச் சமம். சபரிமலை பாரம்பரியத்தையும், ஐயப்ப பக்தர்களையும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவமதித்துள்ளார். ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தின் நம்பிக்கையையும் அவமதித்தவர்கள். ஹிந்துக்களையும் இந்து நம்பிக்கையையும் அவமதித்த பிறகு, இப்போது தேர்தலுக்காக ஐயப்பனைத் தேடி வந்துள்ளனர். இந்த செயல் அனைத்தும் ஓட்டு வங்கிக்காக மட்டும் தான்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக போன்ற இண்டி கூட்டணி கட்சிகள் சபரிமலை நிகழ்ச்சிக்கு செல்வது, ஹிட்லர் யூதர்களை கொண்டாடுவது போன்றது. ஒசாமா பின் லேடன் சமாதானத்தின் தூதராக மாறுவது போன்றது. இது தேர்தல் நேரத்தில் மக்களை முட்டாளாக்கும் செயல் என்று கேரள, தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால் மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள். இண்டி கூட்டணியினர் ஹிந்து மத நம்பிக்கையாளர்களுக்கு சொன்னதையும், செய்ததையும் மறக்க மாட்டார்கள். ஐயப்ப பக்தர்களையும், சபரிமலையின் நம்பிக்கைகளையும் அழிக்க முயற்சிக்கும் பினராயி அரசாங்கத்தின் தலைமையில் நடைபெறும் உலகளாவிய ஐயப்ப மாநாடு ஒரு கேலிக்கூத்து.

34

சிபிஎம், திமுக ஆகிய இருகட்சிகளும் சபரிமலை தொடர்பான நிகழ்வில் பங்கேற்பது ஒரு பெரிய முரண். அவர்கள் உலக ஐயப்ப சங்கமத்தில் கலந்து கொள்வது காங்கிரஸ் ஊழல் மற்றும் சாதிவெறியைக் கைவிடுவதற்கும் சமம். பினராயி விஜயனின் அரசு பல ஆண்டுகளாக சபரிமலையின் சடங்குகளையும், ஐயப்ப பக்தர்களையும் அவமதித்து வருகிறது, மேலும் பலரை சிறையில் அடைத்துள்ளது.

தோழர் ஸ்டாலினும், அவரது மகனும் அரசியல் வாரிசுமான உதயநிதி ஸ்டாலினும் தங்கள் வாக்கு வங்கிகளைத் திருப்திப்படுத்த பல ஆண்டுகளாக இந்துக்களையும், இந்து தர்மத்தையும் வெளிப்படையாக அவமதித்து வருகின்றனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும்போது இதுபோன்றவர்கள் ஐயப்ப பக்தர்களின் கூட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள். இது தேர்தலின் போது மக்களை முட்டாளாக்குவதற்கான ஒரு உத்தி என்பதை அனைத்து மலையாளிகளும், தமிழர்களும் நன்கு அறிவார்கள்.

44

பொய்கள், பாசாங்குத்தனத்தால் மக்களை தவறாக வழிநடத்துவது திமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகளால் பல தசாப்தங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உத்தி. ஆனால் மக்களை இனி முட்டாளாக்க முடியாது. இந்திய கூட்டணி இந்து விசுவாசிகளுக்குச் சொன்னதையும், செய்ததையும் யாரும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு இது மக்களை முட்டாளாக்கும் அரசியல். இனி நடக்காது.

ராகுல் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பாலக்காட்டில் காங்கிரசுக்குள் நடக்கும் நாடகம் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. இப்போது நடக்கும் அனைத்து பிரச்சனைகளும் காங்கிரஸின் மரபணு பிரச்சனை. இது எப்போதும் காங்கிரஸின் கலாச்சாரம். சிலர் அதை நியாயப்படுத்த வருகிறார்கள். இதை எப்படி நியாயப்படுத்த முடியும்?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories