முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ஜான் ஆரோக்கியசாமி என யாரும் இல்லாமல் அனைத்து கட்சி நடவடிக்கைகளையும் விஜய் தனியாக கையாண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாருக்கு ஜாமீன் கிடைத்த பிறகு கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கலாம் என்று முடிவெடுத்து இருந்தார் விஜய். ஆனால் தான் தனியாக வீட்டுக்குள் முடங்கி இருக்கும் ஒவ்வொரு நாளும் தனது இமேஜ் பொதுவெளியில் சிதைகிறது என்பதை உணர்ந்த விஜய், உடனடியாக என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ‘‘எதுக்காக யோசிக்கிறீங்க..? நீங்கள் கரூருக்கு போவதில் என்ன சிக்கல்..? நீங்கள் செல்வதற்கு முன் நிலைமையே மாறிவிடும். திமுக அங்கு இறங்கி அரசியல் செய்கிறது. ஏதாவது ஒன்று செய்யுங்கள். இல்லை என்றால் நானே ஒரு தீர்வு சொல்கிறேன்’’ என தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ், விஜயிடம் உரிமையோடு சொல்லி இருக்கிறார்.
24
ஏன் மறைத்தார்கள்..?
அதை அப்படியே ஏற்றுக் கொண்ட விஜய் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று அருண் ராஜிடம் கேட்க, அவர் கொடுத்த ஐடியா படிதான் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் விஜய் வீடியோக்களில் பேசியிருக்கிறார். அருண் ராஜை பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து கரூருக்கு சென்று விஜய் பேசப் போகிற விஷயத்தை சொல்லி பாதிக்கப்பட்ட குடும்பங்களை தயார்படுத்தியதாக கூறப்படுகிறது. தன்னுடைய போனில் விஜய்க்கு வீடியோ கால் போட்டு கொடுக்க, பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் பேசியதாக கூறுகிறார்கள். இப்போது தவெக பொருளாளர் வெங்கட் ராமனும், அருண் ராஜும் கூறும் ஆலோசனை கேட்க ஆரம்பித்திருக்கும் விஜய், அவர்கள் கட்சி, நிர்வாகிகள் பற்றி கூறும் புதிய தகவல்களால் இதையெல்லாம் ஏன் மறைத்தார்கள் என புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி மீது வருத்தத்தில் இருக்கிறார் விஜய் என்கிறார்கள்.
34
உதயநிதி ஸ்டாலினை விமர்சிக்க கூடாது
இதனை அடுத்து மாவட்டச் செயலாளர்களிடம் நேரடியாகவே பேச ஆரம்பித்துப் இருக்கிறார் விஜய். இதனால், நிர்வாகிகளும், உற்சாகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதன் முறையாக ஜான் ஆரோக்கியசாமியை புறக்கணித்த விஜய், தானே முடிவெடுத்து இதை செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. கரூர் விவகாரத்தில் ஜான் ஆரோக்கியசாமியின் ஆலோசனை தான் தனக்கு பெரிய பின்னடைவு என்று கருதுகிற விஜய், கரூரில் திமுகவுக்கு சாதகமான அரசியலுக்கு தானே வழியை வகுத்துக் கொடுத்து விட்டதாக வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்போது ஜான் ஆரோக்கியசாமி குறித்து பல குற்றச்சாட்டுகளையும் அடுக்கி வருகின்றனர் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.
தவெக நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலினை விமர்சிக்க கூடாது, உங்களுக்கு ஆளுங்கட்சியால் ஏதேனும் பிரச்சனை வந்தால், நீங்கள் தான் உங்கள் தனிப்பட்ட வழக்கறிஞர் மூலம் எதிர்கொள்ள வேண்டும். கட்சி துணை நிற்காது என ஜான் ஆரோக்கியசாமி தடுத்ததாக கூறி வருகின்றனர். விஜய், ஜான் ஆரோக்கிய சாமியின் ஆலோசனைகளை மட்டுமே நம்பி இதுவரை முடிவுகளை முடிவுகளை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
ஜானையும், புஸ்ஸி ஆனந்தை மட்டுமே விஜய் கண்முடித்தனமாக நம்பி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இருவரின் செயல்பாடுகளை பற்றி தெரிய வந்த விஜய், இனி நெருங்கிய நண்பர்களாகவும், ரசிகர் மன்ற தலைவர்களாகவும் இருந்து வந்த நம்பிக்கைக்குரியவர்களை 2ஆம் கட்ட தலைவர்களாக நியமிக்க விஜய் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ஜான் ஆரோக்கியசாமி என யாரும் இல்லாமல் அனைத்து கட்சி நடவடிக்கைகளையும் விஜய் தனியாக கையாண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
விஜய் குடும்பத்தின் கணக்கு வழக்குகளை பல வருடங்களாக பராமரித்து வருகிற தவெக பொருளாளர் வெங்கட்ராமனும் விஜயை நெருங்க முடியாத, அருண் ராஜூம் தான் இப்போது விஜயுடன் நெருக்கமாக இருந்து வருகின்றனர். குறிப்பாக வெங்கட்ராமன் தினமும் இரண்டு மணி நேரம் விஜயுடன் பேசி வருகிறார். இவர் மூலமாக எஸ்.ஏ.சந்திரசேகரின் அட்வைஸ்களும் விஜய்க்கு போய் சேர்வதாகக் கூறுகிறார்கள்