அதிமுககாரன் எங்கள் கட்சிக் கொடியவே தூக்க மாட்டான்..! இதுல அடுத்த கட்சிக் கொடியைப் பிடித்து ஆட்டுவோமா..? செல்லூரார் பொளேர்..!

Published : Oct 11, 2025, 03:41 PM IST

எடப்பாடி பழனிச்சாமி பேசும் இடங்களில் எல்லாம் தவெக தொண்டர்கள் தன்னெழுச்சியாக வந்து கலந்து கொள்கிறார்கள். எங்கள் கட்சி மற்ற கட்சி கொடியைத் தூக்கும் அளவுக்கு அப்படி தரம் தாழ்ந்து போகிற கட்சியே கிடையாது.

PREV
14
அதிமுகவின் தேர்தல் யுக்தி?

நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், சாணர்பாளையம் பகுதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய பிரச்சார கூட்டத்தில் தவெக கொடிகள் ஏந்தி சிலர் பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அதிமுக-தவெக இடையே 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் உருவாகும் கூட்டணியின் ‘பிள்ளையார் சுழி’ என எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் தொண்டர்களை சந்தோஷப்படுத்தி கூறியது கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தரப்பினர் இதை ‘அதிமுகவின் தேர்தல் யுக்தி’ என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘‘அதிமுக காரர்கள் எங்க கட்சி கொடியையே தூக்க மாட்டார்கள். சில இடங்களில், சில நேரங்களில் நான் மாவட்ட செயலாளராக இருக்கும்போது அம்மா என்னிடம் கேட்பார். நம்ம கூட்டத்துல நம்ம கொடியையே தூக்க மாட்டேன்கிறார்கள். ஆனால், மற்ற கட்சி கொடிகள் அதிமாக இருக்கிறது. ஃபார்வர்டு பிளாக் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் என எல்லா கட்சி கொடியும் இருக்கிறது. நம்ம கட்சி கொடி பிடிக்க மாட்டேன் என்கிறார்களே? என்று கேட்பார்.

24
அடுத்த கட்சி கொடியை பிடித்து ஆட்டுவோமா?

அதிமுககாரர்கள் எங்கள் கட்சி கொடியை பிடிப்பது இல்லை. அப்படி இருக்கையில் அடுத்த கட்சி கொடியை பிடித்து ஆட்டுவோமா? இப்படி எல்லாம் தேவையில்லாமல் கேட்காதீர்கங்கப்பா..! எங்களை கோபப்படுத்தாதீங்கப்பா... அதிலும் மதுரைக்காரன்கிட்ட போய் இதெல்லாம் கேட்காதீங்க. நேற்று தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 10 நிமிடம் எங்கள் அவைத்தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அங்கு உட்கார்ந்து விட்டார். பக்கவாத்தியம். அவர் இருந்தால் நமக்கு நல்லா இருந்திருக்கும். பக்கத்தில் இல்லாமல் போய் விட்டார்.

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் மீட்டிங்கில் கலந்து கொண்டார். அங்கே தவெக கொடியை காண்பிக்கிறார்கள். நல்லா புரிஞ்சுக்கோங்கப்பா. உடனே நம்ம ரிப்போர்ட்டர் உங்கள மாதிரி ஊடகங்கள் போய் கேட்கிறார்கள். நீங்கள் எல்லாம் அதிமுக நிர்வாகிகளா? உண்மையிலேயே தவெக தொண்டர்களா? என்று கேட்கும் போது அவர்கள் பொறிந்து தள்ளி விட்டார்கள். எங்கள் தலைவர் விஜய்க்காக குரல் கொடுத்தது அண்ணன் எடப்பாடி. வேறு எந்த அரசியல் தலைவரும் எங்களுக்கு குரல் கொடுக்கவில்லை. எங்களுக்கு குரல் கொடுத்து, எங்கள் சூழ்நிலையை எடுத்துச் சொன்னவர் அவர்தான் என்று சொல்கிறார்கள்.

34
இதற்கு பிறகும் நீங்கள் கேள்வி கேட்கலாமா?

உடனே நீங்கள் தவெக நிர்வாகியா? உங்கள் அடையாள அட்டையை காண்பியுங்கள் என்று கேட்கிறார்கள். அவர்களும் உறுப்பினர் அட்டையை காண்பிக்கிறார்கள். இதற்கு பிறகும் நீங்கள் கேள்வி கேட்கலாமா? ஆயிரம் பேர் ஆயிரம் விமர்சனங்கள் சொல்வார்கள். இது காழ்ப்புணர்ச்சியில் பேசுவதே தவிர வேறொன்றுமில்லை. அதிமுக- தவெக கூட்டணியை தொண்டர்கள் விரும்புகிறார்கள். பொதுச் செயலாளர் விரும்புகிறார். எடப்பாடி பழனிச்சாமி பேசும் இடங்களில் எல்லாம் தவெக தொண்டர்கள் தன்னெழுச்சியாக வந்து கலந்து கொள்கிறார்கள்.

எங்கள் கட்சி மற்ற கட்சி கொடியைத் தூக்கும் அளவுக்கு அப்படி தரம் தாழ்ந்து போகிற கட்சியே கிடையாது. டிடிவி தினகரன் இந்த கட்சியில் எம்.பி., ஆக இருந்தவர். எல்லா பொறுப்பிலும் இருந்திருக்கிறார். அதிமுக தொண்டன் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய தொண்டன். அடுத்த கட்சி கொடியை தூக்கிய வரலாறு உண்டா? 53 ஆண்டுகளில் கிடையவே கிடையாது. கூட்டணி சேர்ந்தால் தோள் கொடுப்போம். தோளிலில் தூக்கி வைத்து கொண்டாடுவோம். எங்களை எதிர்த்தால் கீழே போட்டு மிதித்து விட்டு போவோம். இதுதான் அதிமுக வரலாறு. அதிமுக தொண்டனின் வரலாறு.

44
சாமி என்றால் சாமி... சாணி என்றால் சாணி..!

எங்கள் தலைவர்கள் சாமி என்றால் சாமி. சாணி என்றால் சாணி. இதுதான் எங்கள் அதிமுக வரலாறு. எடப்பாடி பழனிச்சாமியும் சரி யாரை சாமி என்று சொல்கிறார்களோ? அவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுவோம். அவர்கள் சாமி இல்லை எங்கள் தோளில் உட்கார்ந்து கொண்டு எங்களை கடித்துக் கொண்டிருந்தால் சும்மா இருப்போமா? அது எங்கள் பொதுச் செயலாளரிடம் சொல்வோம். அப்போது அவர் என்ன சொல்வார் என்றால் அப்போ கீழே போட்டு மிதியுங்கள் என்பார். அதிமுக காரன் அந்த மாதிரி இழிபிறவி கிடையாது. அதற்காக நாங்கள் அடுத்த கட்சியை மதிக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது. எங்கள் கட்சிக்கொடியையே தூக்க மாட்டார்கள். அப்படி இருக்கும்போது நாங்கள் ஏன் அடுத்த கட்சி கொடியை தூக்கப் போகிறோம்?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories