உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கரூரில் ஏன் அவசர அவசரமாக உடற்கூராய்வு நடைபெற்றது? உயர்நீதிமன்றத்தில், கூட்ட நெரிசல் தடுப்புக்கான வழிகாட்டுதல் நெறிமுறையை உருவாக்கக்கோரிய மனுவின் நோக்கத்தை மாற்றி, உயர்நீதிமன்றம் ஏன் கட்சியை விமர்சித்தது? நீதிபதி செந்தில் குமார் ஏன் தன்னிச்சையாக விசாரணை குழு அமைத்தார்? "ஒரே நாளில் இரு உத்தரவுகள் எப்படி போடப்பட்டது? உடற்கூராய்வுகள் ஒரே இரவில் எப்படி நடந்தன? விஜய் தப்பி ஓடினாரா? என பல கேள்விகளை முன் வைத்தது உச்சநீதிமன்றம்.
தவெக தரப்பின் விளக்கமே கேட்காமல் உயர்நீதிமன்றம் கருத்துகளை முன்வைத்துள்ளது என்றும் உயர்நீதிமன்றத்தை கடிந்து கொண்டது நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு. உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி இந்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும் என கேள்வி எழுப்பினர்.
அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்கிற தவெ க தாக்கல் செய்துள்ள மனு தற்போது நிலுவையில் இருக்கும் போது மற்ற மனுக்களில் நீதிமன்றம் எப்படி உத்தரவிட்டது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தவெக விஷயத்தில் நடந்து கொண்டது நெருடலை ஏற்படுத்தி உள்ளது என்றும் கடிந்து கொண்டது உச்சநீதிமன்றம்.