புதுசா சொல்லுங்க எனக் கேட்கிறார்கள். புதுசா என்ன புதுசா..? தப்பா சொல்லவா? செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும், காற்றில் கல்வீடு கட்டுப்படும். அமெரிக்காவுக்கு ஒற்றையடி பாதை போடப்படும். வீட்டுக்கு உள்ளேயே ஏரோபிளேன் ஓட்டப்படும் இந்த மாதிரி அடிச்சு விடுவோமா? நம்ம சிஎம் அளவிற்கு அதிகமா அடிச்சு விடுவார். அதே மாதிரி அடித்து விடுவோமா? நம்ம அம்மான்னு சொல்லிக்கிட்டு ஜெயலலிதா சொன்ன அந்த விஷயத்தை மறந்து விட்டு ஒரு பொருந்தா கூட்டணியாக ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு, தமிழ்நாட்டோட நலனுக்காக இந்த பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதாக சொல்லும் அவர்களைப் போலவும் நாம் இருக்க மாட்டோம்.
நான் தெரியாமல் தான் கேட்கிறேன் இந்த பாஜக அரசு தமிழகத்திற்கு என்னதான் செய்தது? நீட்டை ஒழிச்சிட்டாங்களா? கல்விக்கு தேவையான நிதியின் முழுமையாக கொடுத்துட்டாங்களா? இல்லை தமிழ்நாட்டுக்கு தேவையான எல்லா விஷயம் செஞ்சுட்டாங்களா? அப்புறம் எதுக்காக இந்த சந்தர்ப்பவாத கூட்டணி? என நான் கேட்கவில்லை, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் உண்மையான தொண்டர்கள் அவர்கள் கேட்கிறார்கள். சரிப்பா அவங்க கூட்டு, பொரியல், அப்பளம் என எது வேண்டுமானலும் விற்கட்டும்.
நமக்கு எதற்கு மக்களே. இன்னொரு ஒரு முக்கியமான விஷயம், கவனமாக கேளுங்கள். அதிமுக பாஜக நேரடி உறவுக்காரர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அவங்களோட கூட்டணி மேல மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதும் மக்களுக்கு தெரியும். ஆனால், அடுத்த சேம் டைம் இந்த திமுக குடும்பம், இந்த பாஜகவுடன் மறைமுக உறவுக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை தயவு செய்து மறக்காதீர்கள்.