விஜய்க்கு 2 முகம் இருக்கு..! ஏமாறப்போவது திமுகதான்..! உண்மையை உடைத்து அதிர வைக்கும் பிஸ்மி..!

Published : Sep 27, 2025, 12:47 PM IST

தனிமனித தாக்குதலில் விருப்பம் இல்லை என ஏற்கெனவே தெளிவுபடுத்தி இருக்கிறார். அடிப்படையில் அமைதியாக இருக்கிறார். விஜயின் அமைதியை நீங்கள் கோழைத்தனம் என அர்த்தப்படுத்திக் கொண்டால் கடைசியில் ஏமாந்து போவதாக இருக்கப்போவது திமுகவினர்தான், விஜய் இல்லை

PREV
14
தவெக தொண்டர்கள் ஏமாற்றம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான மாநில அளவிலான பிரச்சார சுற்றுப்பயணத்தை கடந்த செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் தொடங்கியது. இந்த சுற்றுப்பயணம் ஆரம்பத்தில் சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பல இடங்களில் காவல்துறை அனுமதி பிரச்னைகள், கூட்ட நிர்வாகம் போன்ற காரணங்களால் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் வரை திட்டமிடப்பட்டு இருந்த அவரது சுற்றுப்பயணம் 2026 வரை நீட்டிக்கப்பட்டு, சில ஞாயிற்றுகிழமைகளும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இது தற்போது , மற்றொரு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று சேலத்தில் நடைபெற இருந்த கூட்டம் சேலத்துக்கு பதிலாக கரூர் மாற்றப்பட்டது. பெரம்பலூர், கள்ளக்குறிச்சியில் ஆரம்பத்தில் நடைபெறவிருந்த கூட்டம் நடைபெறவில்லை. இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

24
விஜயின் ஈகோவை தூண்டி விட்ட திமுக

இந்த மாற்றங்கள் த.வெ.க-வின் மாவட்ட அளவிலான அமைப்பை வலுப்படுத்தவும், தொண்டர்களை ஊக்குவிக்கவும் உதவும் எனக் கூறப்பட்டாலும் அவரது கூட்டங்களுக்கு ஆளும் கட்சியான திமுக தொடர்ந்து அனுமதி கொடுக்காமல் இடைஞ்சல்களை ஏற்படுத்தியதால் ஆவேசமடைந்த விஜய், திமுகவின் முக்கியத்தலைவர்களை வெளுக்கும் வகையில் திருச்சியில் வலுவாக உள்ள கே.என்.நேரு, மு.க.ஸ்டாலினின் பூர்வீகமான திருவாரூர், திமுகவின் சிம்ம சொப்பனம் எனக் கொண்டாடப்படும் கரூர் என முக்கியத் தலைவர்களை தகர்க்கும் வகையில் பிரச்சாரத்திட்டத்தை மாற்றி ஆவேசமாக பேசி வருகிறார். இதற்கு காரணம் திமுக விஜயின் ஈகோவை தூண்டி விட்டதாகக் கூறப்படுகிறது.

34
விஜய்க்கு இரண்டு முகம்

அமைதி முகமாகப்பார்த்தே பழகிய விஜய்க்கு இப்படியொரு ஈகோவா என பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரது மற்றொரு முகத்தைப் பற்றி வெளிப்படுத்தி இருக்கிறார் பத்திரிகையாளரான பிஸ்மி. ‘‘விஜய்க்கு பயங்கரமான இரண்டு முகம் இருக்கிறது. அது நிறையப்பேருக்கு தெரியாது. நம்மைப் போன்றவர்கள் விஜயை தொடர்ந்த் பார்க்கும்போது அவர் பயங்கரமான ரிசர்வ்டு டைப், ரொம்ப அதிர்ந்து பேசமாட்டார். அமைதியாகப் பேசுவார் என்றொரு முகம் அது. ஆனால், பலருக்கும் தெரியாத இன்னொரு முகம் விஜய் பயங்கரமான பிடிவாதக்காரர். விஜய் ஒன்றை நினைத்து விட்டால் அதில் இருந்து பின் வாங்கவே மாட்டார். இது நிறையப்பேருக்கு இது தெரியாது. நான் சொன்னது போல் திருவாரூரையும், திருச்சியையும், கரூரையும் ஏன் தேர்ந்தெடுத்தார் என்றால் அந்த இன்னொரு முகம்தான் அதெற்கெல்லாம் காரணம்.

44
ஏமாந்து போகப்போவது திமுகவினர்தான்

விஜயை பொறுத்தவரை திருப்பி அடிக்க வேண்டும் என நினைத்தால் கண்டிப்பாக அடித்து விடுவார். இன்னொன்று விஜய் எப்படிப்பட்டவர் என்பதற்கு உதாரணம் திருவாரூரிலும், நாகப்பட்டினத்திலும் பேசியதை வைத்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம். நீங்கள் வெளிநாட்டுக்குப்போனது வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? எனக் கேட்டார். அடுத்து மக்கள் பணத்தை ஒரு குடும்பமே கொள்ளையடிக்கிறது என்கிற குற்றச்சாட்டை பகிரங்கமாக வைத்ததும் விஜய்தான். ஆகையால் விஜய் வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால் தாங்க முடியாது.

அதேபோல அவரது நோக்கமும் நான் தனிப்பட்ட அரசியல் செய்யவில்லை. டீசண்டான அரசியல் செய்ய விரும்புகிறேன். தனிமனித தாக்குதலில் விருப்பம் இல்லை என ஏற்கெனவே தெளிவுபடுத்தி இருக்கிறார். அடிப்படையில் அமைதியாக இருக்கிறார். விஜயின் அமைதியை நீங்கள் கோழைத்தனம் என அர்த்தப்படுத்திக் கொண்டால் கடைசியில் ஏமாந்து போவதாக இருக்கப்போவது திமுகவினர்தான், விஜய் இல்லை’’ எனக் கூறியுள்ளார் பிஸ்மி.

Read more Photos on
click me!

Recommended Stories