தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது அரசியல் பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளார். நாகப்பட்டினம், திருவாரூரை அடுத்து கரூர் பிரச்சாரம் குறித்து பொதுமக்கள், அரசியல் விமர்சகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இன்று மதியம் சுமார் 12 மணிக்கு கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்டில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்பு காலை நாமக்கல் மாவட்டத்தில் சேலம் சாலையில், கே.எஸ். தியேட்டர் பகுதியில் அவர் பேச உள்ளார். கரூரில் தவெக பெரிய அளவிலான பொதுக்கூட்டத்தை எதிர்பார்த்து, சாலைகளில் பதாகங்கள், கட்சி கொடிகள் அலங்கரித்துள்ளது. பொதுமக்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட விஜய் படத்துடன் தண்ணீர் பாட்டில்கள் இலவசமாக விநியோகிக்கப்படும்.