‘‘மாமியாருக்கு மானத்து மேல ஒரு கண்... மருமவன் மேலயும் ஒரு கண்’’ என்பதைப் போலத்தான் இருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் நிலைமை.
என்.டி.ஏ கூட்டணியை வலுவாக்க வேண்டும் என்பதுதான் உள்துறை அமைச்சர் அமித்ஷா -அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஒரே டார்கெட். ஆனாலும், தொடங்கிய நாளில் இருந்து ஓயாத பஞ்சாயத்துகள். ஒருங்கிணைந்த அதிமுக என முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், உட்கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் , சசிகலா போன்றவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இன்னொரு புறம், ‘‘எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளர் பொறுப்பில் இருந்து மாற்றுங்கள். அதற்கு பிறகு கூட்டணியில் சேர்வது குறித்து யோசிக்கலாம்’’ என டிடிவி.தினகரன் என பெரிய பூட்டுப் போட்டு இருக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமியோ ஒருங்கிணைத்த அதிமுகவுக்கு வாய்ப்பே கிடையாது. அவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள முடியாது என நெற்றியில் அடித்தாற்போல் டெல்லி வரை சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவித்து விட்டு வந்துள்ளார்.