பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் கூறுகையில், ‘‘சந்திப்பு உண்மையானது என்று சிலர் கூறினாலும், சீமான்-பிரபாகரன் இடையே நெருக்கமான உறவு இல்லை. சீமானை அப்போது பிரபாகரனுக்கு தெரியாது’’ என்றும் கூறினார்.
எல்டிடி ஆவணப்படம் எடுத்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ், "பிரபாகரனுக்கு சீமான் யாரென்றே தெரியாது" என்று கூறினார். சீமான் இதை அவதூறு என மறுத்து, "15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரனுடன் எடுத்த படம் வெளியாகிவிட்டது" என்று கூறி, பெரியார் vs பிரபாகரன்" விமர்சனத்துடன் இணைத்து விவாதத்தை திசைதிருப்பினார்.
இந்நிலையில், “உலக அரசியலை உள்ளங்கையில் வைத்திருப்பவர்கள் நாங்கள். எதையும் பார்த்து படிக்கும் கட்சி அல்ல. நான் இங்கு பேசுவதை அங்கு பேசுவதற்காக ஆப்பிரிக்க அதிபர் இப்ராஹிம் டிராரேவை, அந்த நாட்டு சீமான் என புகழ்கின்றனர். இங்கேயோ என்னை பார்த்து சிரிக்கிறீர்கள்’’ என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது விவாதங்களை கிளப்பி உள்ளது.
இந்த ஒப்பீடு வேடிக்கையானதாக இருக்கலாம், ஆனால் இருவரும் தங்கள் மக்களின் சுதந்திரத்திற்காக போராடும் தலைவர்கள். சீமான் தமிழ் தேசியத்தை வலியுறுத்துபவர், டிராரே ஆப்பிரிக்க ஐக்கியத்தை முன்னிறுத்துபவர்’’ என பெருமையடித்து வருகிறார்கள் நாம் தமிழர் கட்சி தம்பிகள்.