விஜயின் பிரச்சாரம் ரசிகர்களின் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் போலீஸ், அரசியல்வாதிகளால் சவால்கள் தொடர்கின்றன. மக்கள் சந்திப்பு அரசியல் பயணத்தில் கரூரில் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு இன்னும் அனுமதி கிடைக்காத நிலையில் நீதிமன்றத்தை நாடலாமா (அவசர வழக்காக விசாரிக்க கோரி) என நிர்வாகிகளுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதேபோல் இதுவரை விஜய் பரப்புரை செய்த திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய இடங்களில் காவல்துறை முறையான பாதுகப்பை வழங்கவில்லை. எனவே, விஜயின் பரப்புரை நடைபெறும் இடங்களில் போதிய காவலர்களை கொண்டு முறையான பாதுகாப்பு வழங்கக் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாளை நாமக்கல், கரூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பேச விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடத்திற்கு இன்னும் அனுமதிக் கிடைக்கவில்லை. இந்நிலையில், வேலுச்சாமிபுரத்டில் பரப்புரை மேற்கொள்ளும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.